சசிகலாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியத் திருப்பமாக சசிகலாவை விடுதலை செய்வதற்கு பாஜக சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து கிடைத்த இந்த சிக்னலால் உற்சாகமான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கட்ட வேண்டிய அபராதத் தொகையான 10 கோடியை தயார் செய்யும் வேலைகளை சசிகலா தரப்பு இறங்கியுள்ளது என டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த சிக்னல் சசிகலாவின் விடுதலைக்கு மட்டுமா? அல்லது சசிகலா அதிமுகவில் செல்வாக்கான இடத்திற்கு வருவதற்கான பச்சைக் கொடியா என்பது தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகமே என்கிற சூழ்நிலையின் விளைவாக அதிமுகவை ஒற்றுமைப்படுத்த பாஜக சசிகலாவுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சசிகலா ரிலீசாகலாம் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரஜினி அரசியலுக்கு வராததால் சசிகலா பக்கம் பாஜகவின் கவனம் திரும்பியுள்ளது.