சென்னையில் ரஜினிகாந்திற்கு அமோக ஆதரவு இருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆகிய 4 மண்டல மக்களின் பிரதான பிரச்னைகள் மற்றும் தேவைகள், அரசியல் கட்சிகளுக்கான ஆதரவுகள் குறித்து கடந்த பதிவுகளில் தெளிவாக பார்த்தோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சென்னை மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களது ஆதரவு குறித்து பார்ப்போம். 

"

சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால், எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் ஆதிக்க சமூகம் என்று கூற இயலாது. சென்னையை பொறுத்தமட்டில் குடிநீர் பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளதாக 13% சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர். 

வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து அதிகமானோர் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில், 7% பேர் வேலைவாய்ப்பின்மையை குறிப்பிட்டுள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 12% பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னையில், ரஜினிகாந்திற்கு கிடைத்துள்ள ஆதரவு திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளில் குறிப்பிடத்தகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் 42% வாக்குகளை பெற்ற அதிமுகவிற்கு தற்போது 28% ஆதரவே உள்ளது. அதேபோல திமுகவிற்கான ஆதரவும் 9% குறைந்து 23% ஆக உள்ளது. 

ரஜினிகாந்திற்கு 19% சென்னை மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனுக்கு 5% பேரின் ஆதரவு உள்ளது. 

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை காட்டிலும் பாஜகவிற்கு சென்னையில் கணிசமான ஆதரவு உள்ளது. 7% சென்னைவாசிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 18% சென்னை மக்கள், பாஜகவுடன் ரஜினிகாந்த் கைகோர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.