’பி.ஜே.பி. கூட்டணியை தேர்ந்தெடுங்கள்’ என்று மக்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அட்லீஸ்ட்...தங்களுக்கு ஆதரவாக மறைமுகமாகவாவது சில வார்த்தைகளை அவர் வாய்ஸாக உதிர்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இதைத்தான் ‘நாங்க கல்யாணத்துக்கு வர்றோம்! நீங்க பிரசாரத்துக்கு வாங்க’ எனும் ப்ராஜெக்டாக மாற்றி மூவ் செய்து கொண்டிருக்கிறது அக்கட்சி.

இந்திய சினிமா வி.ஐ.பி.க்கள் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வி.வி.ஐ.பி.க்களும் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வைபவமாக மாறியிருக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம். ’என்னப்பா ஏதோ முதல் திருமணம் ரேஞ்சுக்கு பில்ட் - அப் பண்ணிக்கிறாங்க!’ என்று வந்து விழும் விமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காமல் வைபவத்தை அடித்து தூள் பண்ண முடிவெடுத்துவிட்டார் ரஜினி. 

சவுந்தர்யாவின் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது, ஒவ்வொரு நாளும் எங்கே என்ன ப்ரோக்ராம் என்பதையெல்லாம் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் பிரத்யேகமாக வெளியிட்டிருந்தது. மாப்பிள்ளை விசாகன் தரப்பிலிருந்து மளமளவென அழைப்பிதழ்ல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்பம் தி.மு.க. சாந்தது என்பதால் சமீபத்தில் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வைத்த படங்கள் இணையத்தில் வைரலாகின.

ஆனால் ரஜினிகாந்த் யாருக்கு அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ரகசியமாகவே இருக்கிறது. மோடி, எடப்பாடி, ஸ்டாலின் என்று மூன்று துருவங்களையும் அவர் தன் மகளின் திருமண வைபவத்திற்கு அழைக்கப்போகிறாரா? என்பதெல்லாம் பெரிய விவாதமாகவே போய்க் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ரஜினி அழைப்பிதழ் கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது இப்போது வரை வெளியாகவில்லை. 

இந்நிலையில் சவுந்தர்யா திருமணத்தின் முந்தையநாள் வைபவமான மெஹந்தி பங்ஷனன்று மோடி தமிழகத்தில்தான் இருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டத்தை முடித்துவிட்டு சட்டென்று பறந்து சென்னை வந்து, போயஸ் சென்று மணமகளை வாழ்த்துகிறாரா! என்று தெரியவில்லை. 

மோடியின் 10-ம் தேதி தமிழக விசிட்டில் ரஜினி வீட்டு வைபவம் இதுவரை இல்லை, சென்னை காவல்துறைக்கும் அப்படியொரு தகவல் இல்லை என்கிறார்கள். சூழல் இப்படிப் போய்க் கொண்டிருக்க...தமிழக பி.ஜே.பி.யினரோ இந்த திருமணத்தை வைத்து ரஜினியை வளைக்க வெகுவாக ஆசைப்படுகின்றனர். இந்த திருமணத்தில் தங்கள் கட்சி வி.வி.ஐ.பி.க்களை பெருவாரியாக கலக்க வைத்து, ரஜினியை பெருமைப்படுத்துவதும், பிறகு அவரை நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைப்பது! என்று முடிவில் இருக்கிறார்கள். 

’பி.ஜே.பி. கூட்டணியை தேர்ந்தெடுங்கள்’ என்று மக்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அட்லீஸ்ட்...தங்களுக்கு ஆதரவாக மறைமுகமாகவாவது சில வார்த்தைகளை அவர் வாய்ஸாக உதிர்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இதைத்தான் ‘நாங்க கல்யாணத்துக்கு வர்றோம்! நீங்க பிரசாரத்துக்கு வாங்க’ எனும் ப்ராஜெக்டாக மாற்றி மூவ் செய்து கொண்டிருக்கிறது அக்கட்சி. பாவம்யா அந்த மனுஷன்!