Asianet News TamilAsianet News Tamil

கட்சித் தலைவர் ஆகச்சொன்னால், அரசியல் ஏஜெண்ட் ஆகிவிட்டாரா சூப்பர்ஸ்டார்..?

இரு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் அரசியல் பேசுவது வழக்கம்தானே. கேப்டனுடன், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்த போது அரசியல் பேசப்பட்டது.’ என்றார். இதைத்தான் வலுவாக பிடித்துக் கொண்டுள்ளனர் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள்...”அப்படியானால் நம் தலைவர் விஜயகாந்தை பார்த்தபோதும் அரசியல் பேசியிருக்கிறார்.

Rajinikanth call on Vijayakanth
Author
Tamil Nadu, First Published Feb 25, 2019, 3:09 PM IST

தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் ‘இதில் எந்த அரசியலும் இல்லை. விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பர். அவரது உடல்நலன் பற்றி விசாரிக்க வந்தேன்.’ என்றார். 

இதே டயலாக்கைத்தான் ஸ்டாலினும் சொன்னார். ஆனால் பிரேமலதாவோ...’இரு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் அரசியல் பேசுவது வழக்கம்தானே. கேப்டனுடன், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்த போது அரசியல் பேசப்பட்டது.’ என்றார். இதைத்தான் வலுவாக பிடித்துக் கொண்டுள்ளனர் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள்...”அப்படியானால் நம் தலைவர் விஜயகாந்தை பார்த்தபோதும் அரசியல் பேசியிருக்கிறார்.

 Rajinikanth call on Vijayakanth

அப்படித்தானே!?...’விஜயகாந்தை பார்த்துவிட்டு கிளம்புகையில், தொண்டர்கள் மற்றும் நாட்டு நலன் கருதி அரசியலில் நல்ல முடிவை எடுங்கள்! என்று ரஜினி கருத்து தெரிவித்திருந்தார்.’ அப்படின்னு பேப்பர்ல செய்தி வந்துச்சு. அதுக்குப் பிறகு, ‘பி.ஜே.பி.யின் தூதுவனாக ரஜினி விஜயகாந்தை சந்தித்திருக்கிறார். சீட் விஷயத்தில் அதிகம் முரண்டு பிடிக்காமல் அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரவேண்டும்! மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைந்ததும் பல வகையிலான உதவிகளையும், வாய்ப்புகளையும் உங்களுக்கு செய்து தருவார்கள்! என்று சொல்லியிருக்கிறார்.’ அப்படின்னு ஒரு தகவல் பரவுச்சு.

 Rajinikanth call on Vijayakanth

 ஆனால் அதை நாங்க முதலில் நம்பலை. பட், ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் இருந்தது அப்படின்னு பிரேமலதா சொல்கிறபோது, ரஜினியின் சந்திப்பிலும் அரசியல் இருந்திருக்குதுதானே! எங்கள் தலைவர் தொடர்ந்து எங்களை ஏமாத்திக்கிட்டும், அவமானப்படுத்திட்டும் இருக்கிறார். போன வாரம் எங்கள் நிர்வாகிகளை அழைத்து சந்தித்து, இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை!ன்னு சொன்னார். ஆனால் இப்போ பி.ஜே.பி.க்கு அரசியல் ஏஜெண்டாக விஜயகாந்தின் வீடுதேடி சென்றிருக்கிறார். இதுவரையில் யாரையும் இப்படி வீடு தேடி சந்திக்காத ரஜினி, தனக்கும் விஜயகாந்துக்கும் பெரிய நட்பு இல்லாத நிலையில் அங்கே சென்றது முழுக்க முழுக்க அரசியல்தான். Rajinikanth call on Vijayakanth

காலங்காலமாக அவருக்காக காத்திருக்கிறோம் நாங்கள். எங்களுக்காக கட்சி துவங்கமாட்டேங்கிறார், ஆனால் பி.ஜே.பி.க்கு அரசியல் புரோக்கர் போல் செயல்படுகிறார்.” என்று சமூக வலைதளங்கள் சிலவற்றில் வெளுத்தெடுத்திருக்கிறார்கள் கடும் கோபத்துடன். இது ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகளின் கவனத்துக்குப் போக, அவர்கள் சில மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ‘என்னய்யா நிர்வாகம் பண்றீங்க? உங்க மாவட்டத்து ரசிகர்களையும், மக்கள் மன்ற நிர்வாகிகளையும் அடக்கி வையுங்க.’ என்று கத்திவிட்டார்களாம். Rajinikanth call on Vijayakanth

பியூஸ் கோயல், முரளிதர்ராவ் ஆகியோரே வந்து சந்தித்தும் கூட அ.தி.மு.க. - பி.ஜே.பி.கூட்டணிக்குள் இன்று வரை தே.மு.தி.க. வரவில்லை. பா.ம.க.வுக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக சீட் கேட்டு முரண்டு பிடிக்கிறது. இந்த நிலையில் ரஜினி சென்று விஜயகாந்தை சந்த்தித்தை பட்டவர்த்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே ரஜினி மன்றத்தினர் மட்டுமல்லாது அரசியல் விமர்சகர்களும் நினைக்கிறார்கள். சூப்பர் புரட்சி!

Follow Us:
Download App:
  • android
  • ios