rajinikanth and pazhanisamy home bomb therataning

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகம் மட்டும் இன்றி, ஆன்மீக அரசியலை மையமாக வைத்து, அரசியல் கட்சி துவங்குவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் அமைத்துள்ள அவருடைய இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக்கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், தமிழக முதலமைச்சர், பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தான், ரஜினிகாந்தின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அந்த மர்ம நபர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நேற்றைய தினம் தான் சென்னை வந்துள்ள நிலையில், இவருடைய வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.