தேர்தலில் வெற்றி பெற்று ரஜினி கோட்டையில் அமரும் நாள் வரும். என திருச்சியில் காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் தமிழருவி மணியன் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழருவி மணியன், ரஜினியை தவறவிட்டால் தமிழகம் வாழ்வதற்கும் எழுவதற்கும் வழியில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் "சிஸ்டம்" கெட்டுவிட்டது என திருக்குறள் போல் ரஜினி சொன்னதாக  குறிப்பிட்ட தமிழருவி மணியன், ரஜினி. துாய்மையான ஆட்சியை தர புறப்பட்டுவிட்டார் ரஜினி என தெரிவித்தார்.

தன் பின்னால் இருப்பவர்கள் ஊழலின் நிழல் படாதவர்களாக இருக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறார் எனவும் தமிழருவி மணியன் கூறினார். 

நான் ரஜினியை சந்தித்தபோது, நீங்கள் 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவீர்களா? என  அனைவரும் கேட்கின்றனர் என கேட்டேன்.

அதற்கு அவர், நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவு எடுத்துவிட்டேன். அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார் என தமிழருவி மணியன் கூறினார்.

நதிகள் இணைப்பு, ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை என அவரது கொள்கை தன்னை கவர்ந்து விட்டதாகவும், அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.