அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக கூறிய ரஜினி அதற்கான வேலைப்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தற்போது மீண்டும் அரசியலை ஓரங்கட்டிவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். 

அரசியல் பயணத்தை தொடங்கும் நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இதனிடையே அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என குழப்பத்தையே மக்களுக்கு பரிசாக தந்து வந்த ரஜினி திடீரென காலா பட சூட்டிங்கில் இருக்கும்போது திடீரென அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். 

ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் அவரின் படம் ஓடுவதற்கு அவர் விளம்பரம் தேடவே இவ்வாறு செய்து வருவதாக குற்றம் சாட்டின. 

இந்நிலையில் அரசியலில் குதிப்பதற்கு முன்பாக நாம் பேஸ்மட்டம் நன்றாக அமைக்க வேண்டும் என கூறிய ரஜினி ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த உத்தரவிட்டார். 

அதன்படி வேலை பாடுகளும் நடைபெற்று வந்தன. இதையடுத்து தற்போது காலா படம் நிறைவடைந்து வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து ரஜினி நடிப்பில் கவனம் செலுத்துவாரா அல்லது அரசியல் களத்தில் குதிப்பாரா என்ற பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் கமல் அரசியல் தொடங்கியிருக்கும் சமயத்தில் இன்று பேசிய ரஜினி அரசியலை சற்று ஓரங்கட்டி வைப்பதாக ரஜினி அறிவித்தார். 

இதையடுத்து தற்போது, ரஜினி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது, பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார். 

இதன்மூலம் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் உண்மையாகியுள்ளன. ரஜினி திரைப்படத்தை ஓட வைப்பதற்காகவே இவ்வாறு செய்துவருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது உண்மைதான் என ரசிகர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.