காங்கிரஸ் தோற்றதற்கும், பாஜக வெற்றி பெற்றதற்குமான காரணத்தை ரஜினிகாந்த் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். 

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி தலைவராக உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தால் பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நீட் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் பாஜக தோவிக்கு காரணம். மத்தியில் மோடிக்கு ஆதரவான அலை வீசியதால் மத்தியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன். கோதாவரி -கிருஷ்ணா -காவேரி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கருதுகிறேன். தோல்வியால் காங்கிரஸ் தலைவர் பதவி விலக தேவையில்லை. கட்சி தொடங்குவது குறித்து ஏற்கெனவே நான் அறிவித்து இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகிகள் அதிகம் உள்ளதால் இளையவரான ராகுல் அவர்களை நிர்வாகிப்பது கடினம். அதனால் ராகுல் காந்திக்கு தலைமை பண்பு குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பொறுப்பல்ல என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

காமராஜர், எ,.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று தமிழகத்திலும் வலுமையான தலைவராக மோடி ஏற்றுக் கொள்ளப்படுவார். ஒரு முறை ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலையோ ஏற்பட்டு விட்டால் அதை மாற்றுவது கடினம். கட்சி ஆரம்பித்து 14 மாதங்களில் கமல் கட்சி மக்களவையில் கனிசமான வாக்குகள் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. கோதாவரி -காவிரி  இணைப்பு திட்டத்தை அறிவித்த நிதின் கட்கரிக்கு வாழ்த்துகள்’’ என அவர் தெரிவித்தார்.