ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ... டிவி ஆரம்பிக்கப்போவது உறுதியாகி விட்டது. அமெரிக்காவில் அதற்காக ஒரு பார்ட்னரையும் கொத்தாக அமுக்கி விட்டதாக தகவல்.

 

வெளிநாடு போகும்போதெல்லாம் தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டுதான் செல்வார் ரஜினி. இந்த முறை குடும்பத்தோடு போயிருக்கிறார். முக்கியமாக மருமகன் தனுஷூம் இந்த லக்கேஜ் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பதை குறிப்பாக கவனித்து வருகிறது தமிழ் திரையுலகம். வெறும் மருத்துவ செக்கப், அல்லது விடுமுறை தின கொண்டாட்டம் என்றெல்லாம் இதை கருத முடியாது என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

தலைக்கு மேல் கட்சி, மன்றம், டி.வி மற்றும் குடும்ப பஞ்சாயத்துகள் என்று சுமந்து கொண்டிருக்கும் ரஜினி, சிலபல சிக்கல்களை தீர்க்கத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறாராம். அங்கு வைத்து சில முடிவுகள் எடுப்பார்களோ என்னவோ? ஆனால், ரஜினி ஆரம்பிக்க உள்ள புதிய டி.வி யின் செலவுகளை மேற்கொள்ள ஒரு பார்ட்னர் கிடைத்திருக்கிறாராம். இதனால் பெரிய சுமையை இறக்கி வைத்திருக்கிறார் ரஜினி.