By; T,Balamurukan

தமிழகத்தில் 3வது அணி அமைவதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட  முடிவடைந்து விட்டதாகவும், அந்த கூட்டணி ரஜினி தலைமையில் பாமக, தமாக, புதிய தமிழகம், கொங்குநாடு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அதிமுக வை தனித்து விடவே இந்த கூட்டணியை பாஜக ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறது.


டெல்லியை கோட்டை விட்டது போல் தமிழ்நாட்டையும் கோட்டைவிட்டு விடக்கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறதாம். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக, பாஜகவின் நிழல் அரசாங்கமாக இருக்கிறது என்கிற பேச்சு  பட்டிதொட்டியெல்லாம் பரந்து விரிந்து போயிருக்கிறது. பாஜக தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை கைப்பற்ற திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது. பாஜக வின் அஜண்டாவின் முக்கியமானது. பாரம்பரியமான கட்சிகளை காணாமல் போகச் செய்வது தான். அதற்கு உதாரணம்  ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தோல்வி, ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி கர்நாடகா, ஒரிசா, பிகார் போன்ற மாநிலங்களில் நடக்கு அரசியல் கலாட்டாக்கள், அங்கே மாறிய முதல்வர் நாற்காலியும், இதற்கு சாட்சி. பாஜகவின் அடுத்த இலக்கு கேரளா, தமிழ்நாடு தான்.


2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல். இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்களை விதைத்து வருகிறார்கள் ஹெச்.ராஜா போன்றவர்கள். ஹெச்.ராஜா சும்மா பேசவில்லை அதற்கான வேலைகயை பாஜக செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்று தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார். வருவார். ஏப்ரல் மாதம் கட்சியை அறிவிப்பார் என்றெல்லாம் தமிழருவிமணி பேசி வருவது.. ரஜினி நடிகராக மட்டுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். இவரை பற்றி பட்டிதொட்டியெல்லாம் பேச வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிய அரசியல் ஆலோசகர்கள் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளையோ, ஊழல்களையோ பற்றி பேசினால் எடுபடாது. சுமூகசீர்திருத்தவாதியான பெரியாரையும், இந்துமதத்தையும் தொடர்புபடுத்தி ,தீயை பொறுத்தினால் அது தொடர்ந்து விமர்சனமாகி அடித்தட்டு மக்கள் மனது வரைக்கும் கொண்டு செல்ல முடியும் என்கிற அவர்களின் அஜண்டா ‘சக்சஸ்’ ஆகியிருக்கிறது. 
தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை சிதைப்பது தான் பாஜகவின் அடுத்த இலக்கு. அதற்கு வருகின்ற சட்டசபை தேர்தலை பயன்படுத்த காத்திருக்கிறது பாஜக. இதையெல்லாம் தெரிந்த திமுக முன்கூட்டியே தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை பக்கத்தில் வைத்திருக்கிறது.


கடந்த சட்டசபை தேர்தலில் எப்படி ஜெயலலிதா தந்திரமாக தேமுதிக போன்ற கட்சிகளை யாருடனும் கூட்டணி சேராமல் தண்ணீர் குடிக்க வைத்தாரோ? அதே பாணியை கையில் எடுத்திருக்கிறது பாஜக.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான கடைகள் விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த தேர்தலில் மூன்றாவது அணி உறுதியாகிவிட்டது. ரஜினி, தாமக வாசன் ,பாமக ராமதாஸ், கொங்குவேளாளர் ஈஸ்வரன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோரை ஒரே அணிக்குள் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.


கூட்டணிக்கான பிள்ளையார் சுழிதான் ரஜினியோடு ராமதாஸ் கூட்டணி என்கிற பேச்சுக்களை கசியவிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா கலைஞர் இருந்தபோது ராமதாஸ் பேசிய அரசியல் பேச்சுக்கள் இப்போது இல்லை. ஆனால் திமுகவை மட்டும் 'அண்ணாஅறிவாலயம்' இடம் பற்றி பட்டா எங்கே,? வாடகை ரசீது எங்கே.? என்று கேள்வி எழுப்பி வருகிறார்.இதுயெல்லாம் பாஜக சொல்லித்தான்  ராமதாஸ் பேசுகிறார் என்று திமுக பதிலடி கொடுத்து வருகிறது. ராமதாஸ் அதிமுகவை பற்றியோ, மத்திய அரசை பற்றியோ ஏன் விமர்சனம் செய்யாமல் வாய்மூடிக்கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். அன்புமணிராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவகல்லூரி தொடங்க அனுமதி கொடுத்த வழக்கு இன்னும் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. ராமதாஸ் திமுகவை திட்டுவது போல் பாஜகவை பற்றி பேச ஆரம்பித்தால் அன்புமணி கம்பி எண்ணப்போவது உறுதியாகி விடும்.இதற்காகவே ராமதாஸ் பாஜக என்ன சொல்லுகிறதோ அதற்கு ஆமாம்சாமி போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம். தமிழகத்தின் வடக்கே வன்னியர்களை கவர்பண்ண ராமதாஸ், கவுண்டர்களை கவர்பண்ண ஈஸ்வரன் போன்றவர்களை கையிலெடுத்து இருக்கிறது பாஜக.அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் ஓவராம்.


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எந்த கட்சியில் அவருக்கு லாபம் இருக்கிறதோ அங்கே தன்னை இணைத்துக்கொள்ளுவார் என்று மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பேசுவது சகஜமாகிவிட்டது. அளவிற்கு போய்விட்டார் டாக்டர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு  டாக்டர்.கிருஷ்ணசாமி, பாஜக பக்கம் போனதற்கு இந்த காரணங்கள் தான்  என்று சொல்லப்படுகிறது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை 'தேவேந்திரகுல வோளாளர்' என்று அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி கொடுத்ததால் தான் என்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள்.
1991ம் ஆண்டு தமாக சைக்கிள் சின்னம் நடிகர் ரஜினி ஆகியோர் திமுக வெற்றிக்கு முக்கிய ஹீரோக்கள் என்றே சொல்லலாம். அப்போது இருந்த அலை இப்போது ரஜினிக்கு இருக்கிறதா..? ம்;ம்ம்..


தமிழ்நாட்டு மக்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாக்கு வங்கிகளை நாம் பிரிக்க முடியாது என்பது தேசியகட்சிகளுக்கு தெரியும். அதனால் தான் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் இந்த இரண்டு கட்சிகள் மீது குதிரையேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை உடைக்க வேண்டும் என்பது தான் பாஜக ப்ளான்.


தமாக தமிழ்நாட்டில் சூரியனோடு, உச்சம் பெற்றிருந்தது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் 40 எம்பிக்கள் டெல்லிக்கு போனார்கள். அந்த சமயத்தில் பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு இதன் கட்சி தலைவர் மூப்பனாருக்கு தேடி வந்தபோது கருணாநிதி அதை தடுத்துவிட்டார் என்கிற கோபம் மூப்பனாருக்கு இருந்தது.  அதன் பிறகு காங்கிரஸ் கட்சியோடு தமாகவை இணைத்து விட்டு காங்கிரஸ் மந்திரி சபையில் கப்பல்போக்குவரத்து துறை மந்திரியானார் ஜிகே.வாசன்.
அதன்பிறகு  ப.சிக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வாசன் மீண்டும் தமாக கட்சியை தொடங்கினார். அதிமுகவில் கூட்டணிக்கு தவாமாய் தவமிருந்து தமாகவை தள்ளிக்கொண்டு போய் அதிமுக கூட்டணியில் கரை சேர்த்திருக்கிறார். 
நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் 3வது அணியை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக. இந்த அணியில் பாமக, தமாக புதியதமிழகம், கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எல்லாம் ரஜினி தலைமையிலான கூட்டணிக்கு தயாராகிவிட்டார்கள். கூட்டணிக்கு உண்டான அனைத்து உடன்பாடுகளும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் உலாவந்திருக்கிறது.
பாஜக, அதிமுக வை தனித்துவிட முடிவு செய்திருக்கிறது. அதனால் தான் இந்த 3வது அணியை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக .இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட எடப்பாடி தமிழக மக்கள் இதயத்தில் இருந்து இரட்டை இலையை பிரித்து விடக்கூடாது ,பாஜக ப்ளான் தமிழகத்தில் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தான் “ எடப்பாடி , டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம், கால்நடை ஆராய்ச்சி மையம், டயர் தொழிற்சாலை என பம்பரமாய் சுழன்று வீசிக்கொண்டிருக்கிறார்.
அதிமுக தனித்துவிடப்பட்டால் யாருக்கு லாபம் அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
“அதிமுக தனித்துவிடப்பட்டால் அதிமுகவுக்கு தான் லாபம். அதிமுக 30சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கிறது. தேமுதிக,5சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கிறது. தேமுதிக இல்லாவிட்டாலும் அதிமுக விற்கு பாதிப்பு வராது. காரணம் மற்ற கூட்டணி கட்சிகள் வாக்குகளை பிரித்து விடுவார்கள்.  தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். 3வது அணியில் சேரும் கட்சிகளின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது அல்ல.”என்கிறார்கள்.