Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கற்றுத் தர வேண்டாம்! கமலைத் தாக்கி பேசிய ரஜினி!

Rajini talk before fans
Rajini talk before fans
Author
First Published Feb 23, 2018, 12:40 PM IST


அரசியலில் ஒவ்வொரு படியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியது அவசியம் என்றும் எனவே வலுவான அடித்தளம் தேவை என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 10 வருடங்களுக்கு மேலாள அரசியலுக்கு வருவேன் என்று கூறிவந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருந்தார். தனது ரசிகர்கமன்ற நிர்வாகிகளைக் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்.

ரசிகர்கள் முன்பாக பேசிய ரஜினி, எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை. தமது ரசிகர்கள் மற்றவர்களுக்கு அரசியல் பாடல் கற்றுத் தருவார்கள் என்று கூறினார். அரசியலில் ஒவ்வொரு படியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பில்டிங் (அரசியல்) சாதாரணமானதல்ல. எனவே வலுவான அடித்தளம் தேவை. இந்த குடும்பத்தைப் பொறுத்தவரை தலைவனாக நான் சரியாக
செயல்படுகிறேன். 

ஒரு குடும்பம் நடத்த வேண்டுமானால் குடும்பத்தலைவன் சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக இருக்கிறேன். ரசிகர்களைச் எல்லோரையும் சந்திக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்றார். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் என்ற அவர், நாம் அமைதியாக இருந்து வேலை பார்ப்போம் என்று கூறினார். நடிகர் கமல் ஹாசன், நேற்று முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், ரஜினிகாந்தின் இந்த பேச்சு பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios