rajini planning to make chidambaram as chief minister
சினிமாகாரர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதில் சென்டிமெண்டுக்கும், ஜோதிட ஆலோசனைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு ஜோதிடரின் ஆலோசனையே ரஜினியின் முடிவை மாற்றி இருக்கிறது.
சினிமா இயக்குனர் ஆகும் முடிவில் சென்னைக்கு வந்த ஒருவர், சில முக்கிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, பின்னர் அவர் முழு நேர ஜோதிடர் ஆகிவிட்டார்.
அவர்தான், தமிழ் திரை உலகை சேர்ந்த முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருபவர். சிவன் மற்றும் பெருமாள் பெயரை கொண்டுள்ள அவர்தான், ரஜினிக்கும் அவ்வப்போது ஆலோசனை சொல்லி வருபவர்.
பார்த்திபன்-சீதாவுக்கு விவாகரத்து ஆகும், இனி ராமராஜனுக்கு மேக்-அப் போடும் வாய்ப்பு இருக்காது, மைக் நடிகரின் சினிமா பயணம் முடிந்து விட்டது என்று முன் கூட்டியே கணித்து சொன்னவர் அவர்தான்.
அதனால், அவரது ஜோதிட ஆலோசனையை எந்த சினிமா பிரபலமும் தவிர்ப்பது இல்லை. லிங்கா பட பிரச்சினை தலை விரித்து ஆடிய கால கட்டத்தில், ரஜினி அவரிடம், இனி அரசியலில் இறங்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு, அரசியலில் உங்களுக்கு அப்படி ஒரு அமைப்பு இல்லை என்று, அவர் நேரடியாகவே சொல்லி இருக்கிறார். அதே சமயம், கிங் ஆக இருப்பதைவிட கிங் மேக்கராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
ஆனால், பாஜக தொடர்ந்து நச்சரித்து வந்ததால், அரசியலில் இறங்கி விடுவது என்று முடிவெடுத்த ரஜினி, அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி விட்டார்.
1996 ம் ஆண்டில் இருந்து, அனைத்து கட்சியிலும் ரஜினிக்கு நண்பர்கள் இருந்தாலும், அவர் தொடர்ந்து பல விஷயங்களில் ஆலோசனை கேட்பது, ப.சிதம்பரம் ஒருவரிடம்தான்.
அதேபோல், பல நெருக்கடியான சூழ்நிலையிலும், ரஜினிக்கு பல்வேறு உதவிகளை செய்தவரும் சிதம்பரம்தான். அதனால், குறைந்த பட்சம், மாதத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது நேரிலோ, செல்போனிலோ மணிக்கணக்கில் இருவரும் பேசி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அரசியலில் இறங்க முடிவெடுத்த ரஜினி, அது தொடர்பாக சிதம்பரத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு, நீங்கள் தாராளமாக அரசியலில் இறங்குங்கள். ஆனால், பாஜக வில் சேர வேண்டாம். அது உங்கள் தனி தன்மைக்கும், இமேஜுக்கும் இடையூறாகிவிடும். அதனால், தனி கட்சி ஆரம்பித்து விடுங்கள் என்று சிதம்பரம் கூறி இருக்கிறார்.
அதற்கு மறுநாள்தான், சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
இந்நிலையில், அரசியல் ரீதியாக பதவியில் அமர முடியாது என்று உணர்ந்த ரஜினி, தமக்கு நம்பிக்கைக்கு உரிய, படித்த, அரசியல் அனுபவம் நிறைந்த ப.சிதம்பரத்தை முதல்வராக முன்னிறுத்தலாம் என்று முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆகவே, ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். ஆனால் எந்த பதவியிலும் அமரமாட்டார். அதே சமயம், அவர் கை காட்டும் நபரே முதல்வராக அமருவார். அவர் ப.சிதம்பரமே என்று சிலர் அடித்து கூறுகின்றனர்.
அதன்மூலம், தம் மீதான கன்னடர் என்ற பிரச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் ரஜினி விரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது.
ரஜினியின் இந்த முடிவு பாஜக வுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், பாஜகவை கூட்டணியில் சேர்த்து, சமாதானம் செய்து கொள்ளலாம் என்பதும் ரஜினியின் திட்டமாக உள்ளது.
இதனிடையே, 1990 களில், சென்னையில் படகு ஓடும், ப.சிதம்பரம் முதல்வர் ஆவார் என்று, யாகவா முனிவர் சொன்னார். அப்போது அனைவரும் அதை கேலி செய்தனர்.
கடந்த 2015 ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னையின் பல இடங்களில் படகு ஓடியது. அது போல், ப.சிதம்பரமும் முதல்வர் ஆவார் என்று கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
