Asianet News TamilAsianet News Tamil

பீஸ் பீஸாகும் ரஜினி மன்றம்... சட்டப்பேரவை தேர்தல் வரை தாங்குமா? 20,000 பேரை தட்டித் தூக்கிய மு.க.ஸ்டாலின்!

டி.டி.வி.தினகரன் கட்சியை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளது.
 

rajini party 20000 members join dmk
Author
Tamil Nadu, First Published Feb 18, 2019, 7:12 PM IST

டி.டி.வி.தினகரன் கட்சியை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

rajini party 20000 members join dmk

கடந்த 8ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தலைமையில் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.rajini party 20000 members join dmk

இந்நிலையில் ரஜினி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சமீபத்தி அறிவித்து இருந்தார். இதனால் விரக்தியில் அவரது மக்கள் மன்றத்தினர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த டி.மதியழகன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அளவிலான அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் 20 ஆயிரம் பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி 23.02.2019 அன்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகால் முன்பு உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் பிரம்மாண்ட இணைப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 rajini party 20000 members join dmk

கடந்த சில மாதங்களாக தினகரன் கட்சியிலிருக்கும் முக்கிய புள்ளிகளை தட்டித் தூக்கிவந்த திமுக, தற்போது ரஜினி தலையில் கை வைத்துள்ளது, அதுவும் ரஜினியின் சொந்த மாவட்டமான  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக திமுகவிற்கு வாரி போட்டுள்ளது. தமிழகத்தில் முதலில் ரஜினி மக்கள் மன்றம் உடையும் மாவட்டம் கிருஷ்ணகிரி தான். இதனால் ரஜினியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
 


 

Follow Us:
Download App:
  • android
  • ios