மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை, நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு பங்கு பெறும் முதல் அரசியல் நிகழ்ச்சி இது.

சென்னை, வானகரம் அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். 

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்வைத்து தமிழகத்தில் களம் இறங்கியுள்ளார். ஆனால் நடிகர் கமல் திராவிடத்தை முன்வைத்து அரசியல் பெயரும் கொடியும் அறிமுகப்படுத்தி அரசியல் செல்வாக்கை முன்னெடுத்து செல்கிறார். 

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏ.சி.சண்முகம், அழைப்பின் பேரில் நடிகர் ரஜினிகாந்த் சிலையை திறந்து வைத்தார். நடிகர் ரஜினகாந்த் அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையில், அவரின் முதல் அரசியல் நிகழ்வாக இது உள்ளது. இந்த விழாவில் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.