இந்த பிரபஞ்சத்தில் அரசியல்வாதி ஆகும் முன்னரே அரசியல் விமர்சனங்களால் தாறுமாறாக வகுந்தெடுக்கப்படும் செலிபிரெட்டி ஒருவர் உண்டென்றால் அது ரஜினிகாந்த் தான். எடுத்ததுக்கெல்லாம் அவரை வெளுத்துக்கட்டும் விமர்சகர்கள், கஜா விஷயத்தில் அவரை கண்டு கொள்ளாமல் விடுவார்களா? இதோ வைத்து செய்கிறார்கள் இப்படி...

ரிலீஸாகி, கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றது ரஜினியின் 2.0 படம். இதன் தெலுங்கு வெர்ஷனை ப்ரமோட் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ஷங்கர் மற்றும் அக்‌ஷய் குமாருடன் ஆந்திரா சென்றார் ரஜினி. அங்கே சென்று தனது புதுப்பட வசூலுக்காக ஒரு வைப்ரேஷனை கிளப்பிவிட்டு வந்தார். 
அதேபோல்  ரஜினியின் நெருங்கிய நண்பரும், கன்னட ஸ்டாருமான அம்பரிஷின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரஜினி கர்நாடகாவுக்கு பறந்தார். அங்கே சென்று சோகமே உருவாக நின்றார், உருகினார், கண் கலங்கினார். 

ரஜினியின் உடல்நிலை சரியில்லை என்று திடீரென ஒரு செய்தி பரவியது. ‘வீட்டுக்குள்ளேயே வெச்சு கொஞ்சம் ட்ரீட்மெண்ட் பார்த்திருக்காங்க.’ என்று ராகவேந்திரா மண்டப அலுவலக வட்டாரங்களே இதை கிசுகிசுத்தன. ஆனாலும் அன்று மாலையில் தனது மனைவி லதா ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு வந்தமர்ந்தார், சுடச்சுட பேசினார். ரஜினியின் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்பதை அவரது வாடிய முகமே காட்டிக் கொடுத்தது. 

ஆக, தன் பிஸ்னஸுக்காக ஆந்திராவுக்கும், நண்பனுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடகாவுக்கும் அவரால் பறக்க முடிகிறது.  மனைவியின் விழாவில், உடல் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் வந்து நிற்க முடிகிறது. ஆனால் தனக்கு கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்த தமிழ் மண்ணின் ஒரு பகுதியே பாழ்பட்டு கிடக்கிறது அதை வந்து அவரால் பார்க்க முடியாதா? 

’எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன்’ என்று முதல்வர் கனவில் பேசும் ரஜினி, முதல்வரானால் டெல்டாவையும் சேர்த்துதானே ஆள வேண்டும். துயரத்தில் கிடக்கும் அந்த மக்களை இன்று போய்ப் பார்க்க கூடாதா? 

இதையெல்லாம் பேசினால் நாம் அவர் பார்வையில் விரோதிகளாகிவிடுகிறோம். சரி இருக்கட்டும், அரசியல் கட்சி துவங்கிய பிறகு டெல்டாவுக்கு வந்து தானே ஆகவேண்டும்!?

- என்று வறுத்திருக்கிறார்கள்.