எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எப்படியாவது தேற்கடித்தே தீர வேண்டும் என்ற வியூகம் ரஜினி மக்கள் மன்றத்தில் இப்போதே அரம்பமாகிவிட்டதாக தகவல்கள் உலா வருகிறது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலதிட்ட பணிகளை வழங்கி அதற்கான வேலைகளை இப்போதே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். 

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும்  தொடர்ச்சியாக போட்டியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற்ற தொகுதி கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி, இரண்டு முறையும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட தன் சொந்த பணத்தை  தொகுதிக்கு செலவழித்து அத்தொகுதி மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார் ஸ்டாலின்.  அதற்கு காரணம், கொளத்தூரை  திமுகவின் கோட்டையாக மாற்றுவதுடன், தனக்கென ஒரு அடையாளமான அதை உருவாக்கிக் கொள்ள  வேண்டும் என்பதே அதற்கு காரணம். அப்படிப்பட்ட தொகுதியில் ஸ்டாலினுக்கு போட்டியாக ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர் . கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில்,  மக்களுக்கு  குடிநீர் வசதி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆழ்துளை கிணறு, மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் பொன்றவற்றை ரஜனி மக்கள் மன்றத்தினர் அமைத்து கொடுத்துள்ளதுடன், அங்குள்ள கழிப்பறைகளை சீரமைத்து, அப்பகுதிக்கு ஒரு பொது தொலைக்காட்சி பெட்டியையும் வழங்கியுள்ளனர்.

   

இது குறித்து அப்பகுதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியபோது, வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. எனவே தற்போதே மக்கள் நல பணிகளை தீவிரப்படுத்தவும் தலைமையிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. தேர்தலில் எங்களுக்கு நேர்எதிர் போட்டியாக இருக்கப்போவது திமுக மட்டும்தான் எனவே அவர்கள்தான் எங்களது டார்கெட்,  இப்போதிருந்தே  தேர்தல் பணிகளில் இறங்கி விட்டோர், திமுகவுக்கு எங்கொல்லாம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தேர்தல் நெருங்குவதற்குள்  மக்கள் மத்தியிலிருந்து திமுகவை சைலண்டாக காலி செய்து, தலைவரை 234 தொகுதிகளிலும் வெற்றி வைக்கும்  வேலைகள் ஆரம்பித்து விட்டது என கூறி பகீர் கிளப்பினர். 

அரசியலுக்கு இதோ வந்துவிட்டார் அதோ வந்துவிட்டார் என்று ஆசாப்பு காட்டிவந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தனது அரசியல் வருகையை உறிதி செய்தார் ரஜினி. தன்  ரசிகர் மன்றத்தை அப்படியே ரஜனி மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் இயக்கமாக செயல்படுத்திவருகிறார். அத்துடன் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு இணையான ஒரு பலம் மிக்க கட்சியை உருவாக்குவதே தம் நோக்கம் என கூறியதுடன். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில்  தீவிரம் காட்டிவந்தார். ஒருவழியாக கட்சியின் கட்டமைப்பு பணிகள்  95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு இப்போதை அதற்கான வியூகங்களில் இறங்கியிருப்பது குறிப்பிடதக்கது.