அமெரிக்காவிற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்திற்கான தமிழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவிற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக, வட்டம் ஒன்றியம் மாவட்டம் என அனைத்திற்கும் நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன், நியூ ஜெர்சி, அர்கன்சாஸ், கரோலினா, விர்ஜினியா, டெலவர், பென்சில்வேனியா என அனைத்து மாகாணங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம்  ரஜினி  தமிழகம் மட்டுமின்றி அவருடைய அரசியல் செல்வாக்கை அமெரிக்கா வரை பாய செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.