Asianet News TamilAsianet News Tamil

ரஜினி- கமலை இணைத்ததே பா.ஜ.க.,தான்... பகீர் பின்னணி..!

ரஜினி கமல் இணைந்து அரசியல் செய்யப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இவர்களை இணைத்ததே பாஜக தான் என்கிற கருத்துக்களும் வெளியாகி இருக்கின்றன. 

Rajini: Kamal joins BJP
Author
Tamil Nadu, First Published Nov 20, 2019, 4:05 PM IST

இதுகுறித்து கருத்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் பலரும், இந்தக் கூட்டணி பொருந்தாக்கூட்டணி என்கிறனர். ‘’இதைவிட கேவலமான ஒரு முடிவு இருக்க முடியாது. ரஜினி மேல் மரியாதை மல்லாந்தது. ஆன்மிக அரசியலும் நாத்திக இந்து விரோத அரசியலும் கை கோர்க்கப் போகிறதா? அதிமுக நன்றாக ஸ்திரப்படுத்திக் கொண்டால் அதன் ஆட்சி தொடர வாய்ப்புள்ளது. ஆனால் அவர்களும் இந்து விரோத பாதையில் பயணிக்காமல் இருக்கணும்.

 

ரஜினி கமல் இணைவது நல்லதல்ல. ரஜினி தனித்தே எதிர் கொள்ள வேண்டும். சினிமாவில் நண்பகர்களாக இருக்கட்டும். ரஜினி வழி தனி வழியாகவே இருக்க வேண்டும். நாளை கமல் மற்றவரை போல இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்று சொல்ல கூடும். இருவரும் கொள்கையில் வேறு பட்டவர்கள்.
சினிமாவில் மட்டும் தான். அரசியலில் ரஜினி முதுகை குத்துவார் கமல். ரஜினி ரசிகரை விமர்சனம் செய்தால் கமல் ரசிகராம். இது திமுக -அதிமுக மாதிரியே தான் நாசமாக போகுது.

 

ரஜினி பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் அவர் ஒரு பிம்பம், மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் சினிமாவில் கமல் உலகநாயகன் என்ற ஒரு பிம்பம். இரண்டும் ஒன்று சேர்ந்தால் ஒரு பிம்பம் இன்னொரு பிம்பத்தை தலைவராக ஏற்காது. அரசியலுக்கு அது அறவே ஒத்து வராது. 2021 தேர்தல்ல ரஜினி கமல் ரெண்டு பேருமே பிஜேபியோட பி டீமாதான் இருக்கும் என அவதானிக்கிறேன்.

 

ஆளும் மத்திய- மாநில அரசின் தவறான செயலை மறைக்க ரஜினி, கமலை இறக்கி விடுவது, பின் அவர்களை இணைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது. இதே வேலை பாஜகவுக்கு. தமிழகத்தில் பாஜக வரமுடியாது. ஆகையால் இவர்களை களமிறக்கி இருக்கிறார்கள்.

ரஜினி கமல் இனைந்து செயல்படுவதும் தனித்து செயல்படுவதும் அவரவர் விருப்பம் போல நடக்கட்டும். இணைந்து பயணிப்பார்கள் என்று கூறியபின் அது சாத்தியப்படாமல் போனால் இருவருக்குமே அது பலகீனத்தை ஏற்படுத்தும். அதனால் அந்த விவாதங்களை தவிர்ப்பதே நல்லதென்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என பலரும் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios