ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மக்கள் நலப்பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரது வருகை குறித்து திமுக எம்.பி அதனை விமர்சித்துள்ளார்.

காமராஜ்+ அண்ணாதுரை= ரஜினிகாந்த். தமிழ்நாட்டு மக்கள் விரைவில் இதற்கு சாட்சியாக இருப்பார்கள் என ரஜினிகாந்த் ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள திமுக தருமபுரி தொகுதி எம்.பி செந்தில், ‘’எப்படி பார்த்தாலும் காமதுறைனு தான் வருது.
எப்படி வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கைகள் செய்தாலும் நீங்க சொன்ன பேரு வரவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். பொதுவாகவே திமுக எம்.பி செந்தில் பாமக, உள்ளிட்ட கட்சிகளை தனது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியை காமதுறை என அவர் விழித்துள்ளது ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.