நடிகர் ரஜினிகாந்தில் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ரூபாய்க்கு குறைந்த விலையில் சைவ உணவுகளை வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள மணப்பாக்கத்தில், எம்.ஜி.ஆர். சாலையில், அம்மா உணவகத்துக்கு எதிர்ப்பக்கத்தில்  நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவரும் ரஜினியின் ரசிகருமான வீரபாபு தொடங்கியுள்ளார்.  உணவகத்தை கட்டிட வேலைகளில் சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இங்கே அளவு சாப்பாடு பத்து ரூபாய்க்கும் அளவில்லாத சாப்பாடு 30 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அந்த உணவகம் அறிவித்துள்ளது. சாம்பார், ரசம், வத்தகுழம்பு, கூட்டு சேர்த்த அளவு சாப்பாடு வெறும் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.

இன்றைக்கு இருக்கும் விலைவாசில இதெல்லாம் ஏழைகளுக்கு செய்ற தொண்டு மாதிரி தான். இந்த உழைப்பாளி உணவகம் காலமெல்லாம்  ஏழைகளின் பசியாற்ற வேண்டுமென இறைவனை வேண்டுகிறோம் என வீரபாபுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.