மென்மையான போக்கை கடைபிடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். அஜித்துடனும், விஜயுடனும் மோதும் அதிரடி முடிவில் இருக்கிறார்.

 

இந்த பொங்கலுக்கு அஜித் படத்துடன் மோத வேண்டும் என்று முடிவெடுத்தவரே ரஜினிதானாம். அதுமட்டுமல்ல, வருகிற தீபாவளிக்கு முருகதாஸ் இயக்கும் படத்தை இறக்குவதன் மூலம் அட்லீ இயக்கும் விஜய் நடிக்கும் படத்திற்கும் டஃப் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி. (அட்லீ விஜய் இயக்கும் படத்தை அறிவிக்கும்போதே 2019 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.) அவரது திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன? என்று புரியாமல் மண்டையை சொறிந்து கொள்கிறார்கள் திரையுலகினர்.

நேற்று வெளியான ‘பேட்ட’ பட ட்ரெய்லர், தாறுமாறு லெவலில் இருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியொரு ரஜினியை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்கிற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அதுவும் ட்ரெய்லர் இறுதியில் அவர் கொடுக்கிற டான்ஸ் மூவ்மென்ட் ‘வாரே..வாவ்’ ரகம்! இது ஒருபுறமிருக்க, ட்ரெய்லரை போலவே முழு படமும் இருந்துவிட்டால் ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு அதுவே பெரிய சப்போர்ட்டாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இதைவிட பலத்த மாஸ் காட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது விஸ்வாசம் படக்குழு. 31ம் தேதி இரவோ, அல்லது 1ம் தேதி காலையோ தெறிக்க தெறிக்க விஸ்வாசம் ட்ரெய்லரை வெளியிடப் போகிறார்களாம். ஒற்றுமையாயிருந்த அஜித், ரஜினி ரசிகர்களை வேற்றுமையாக்கி சண்டை போட வைத்து வருகிறார்கள். மொத்தத்தில் பொங்கலுக்கு அஜித்துடன் மோதல் தீபாவளிக்கு விஜயுடன் உரசல் என்கிற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி. ’அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்டுடுவேன்...’ என பேட்ட படத்தில் ரஜினி பேசும் வசனம் தான் ஞாபகம் வருகிறது.