தேர்தல் வரும் சமயத்தில் அரசியல் கட்சியினர் சர்வே எடுப்பது வழக்கம். சட்டசபைத் தேர்தலில், கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் தங்களுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என தி.மு.க., தரப்புல நம்புகிறது. இப்போது, ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் நகர்ப்பற ஓட்டுகளுக்கு பங்கம் வந்துடும் என பயப்படுகிறது திமுக தலைமை. அதனால், ரஜினி கட்சியால், எந்தெந்த தொகுதியில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தி.மு.க., தரப்பில் ரகசிய சர்வே எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

அந்த தொகுதியில் கூடுதலாக பணத்தை இறைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். அடுத்து அந்த தொகுதிகளை எல்லாம், கூட்டணி கட்சிகள் தலையில் கட்டிவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகரப் பகுதிகளில் அதிக வாக்குகளை வாங்கி இருப்பதால், இந்த முறையும் நகரப் பகுதிகளையே அவர் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.