அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக ரஜினி அறிவித்த போது தனது ரசிகர்களை அழைத்து விரைவில் கிடாய் விருந்து வைப்பேன் எனச்சொன்னார் ரஜினி. அவர் சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
மதுரையில், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக ரஜினியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு கிடாய் விருந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வரும் டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாட தமிழகம் முழுவதும் நலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக கிடாய் விருந்துக்கு தடபுடல் ஏற்பாடு நடந்து வருகிறது. அத்தோடு 1000 மரக்கன்றுகள் வழங்குதல், ஆதரவற்ற முதியோர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள், ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு, சீருடைகள் என பல உதவித்திட்டங்களையும் வழங்க இருக்கிறார்கள்.

அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக ரஜினி அறிவித்த போது தனது ரசிகர்களை அழைத்து விரைவில் கிடாய் விருந்து வைப்பேன் எனச்சொன்னார் ரஜினி. அவர் சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஒருவேளை ரஜினி அப்படிச் சொன்னதை மறந்துகூட இருப்பார். ஆனால், அவர் சொன்னதை அவரது ரசிகர்கள் மறக்கவில்லை. அவர்களாகவே கிடாய் விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். தலைவர் சொன்னதை தொண்டர்கள் செய்கிறார்கள்.
