Asianet News TamilAsianet News Tamil

இப்போ இல்லைன்னா எப்போ.?முகக்கவசங்களில் ரஜினியின் அரசியல் மெசேஜ்.. கொரோனாவிலும் தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்!

அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா ரூபத்தில் ரஜினியின்  ‘மூவ்’களுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. மார்ச் 24 முதல் ஊரடங்கு என்று ஆரம்பித்து, இன்று தமிழகத்தில் 70 ஆயிரம் கொரோனா கேஸ்கள், மீண்டும் ஊரடங்கு என்று கொரோனா ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பூதத்தின் விஷ்வரூபம் காரணமாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ரஜினி அறிவித்தப்படி அவருடைய படை இருக்குமா என்ற சந்தேகமும் பலரிடம் ஏற்பட்டுவிட்டது.
 

Rajini fans distribute Rajin mask
Author
Chennai, First Published Jun 25, 2020, 9:33 AM IST

அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினி பேசியதை முகக் கவசத்தில் குறிப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பொதும்க்களுக்கு வினியோகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.Rajini fans distribute Rajin mask
2017 டிசம்பர் 31 அன்று, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது படையும் இருக்கும் என்று ரஜினி அறிவித்தார். அதன்பின்னர் ரஜினி எதை அறிவித்தாலும், எதைச் சொன்னாலும் பரபரப்பு, விமர்சனம், சர்ச்சை என்று அரசியல் பாதையில் ஜெட் வேகத்திலேயே நகர்ந்துகொண்டிருந்தார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரியில் ரஜினி தொடங்கப் போகும் அரசியல் கட்சி பற்றி பேச்சுகள் சூடுபிடித்தன. ஏப்ரலில் கட்சி அறிவிப்பு, ஜூலையில் மாநாடு, செப்டம்பர் முதல் பிரசாரம் என ரஜினி பற்றிய தகவல்கள் தீயாய் வந்துகொண்டே இருந்தன.

Rajini fans distribute Rajin mask
ஆனால், மார்ச் 13 அன்று ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய பிறகு, அதெல்லாம் புஷ்.. என்றானது.  கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுவேறு தலைமை, இளைஞர்களுக்கு வாய்ப்பு என சினிமா பாணியில் அதிரடியாகப் பேசிய ரஜினி, “அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. தன்னுடைய பேச்சை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். அது புரட்சியாக மாற வேண்டும். புரட்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன்” என்று ரஜினி பேசினார். இதனையடுத்து கொஞ்சம் சோர்ந்துபோன ரசிகர்கள், வேறு வழியில்லாமல் ரஜினியின் பேச்சை மக்களிடம் கொண்டு செல்லும் வேலையை தொடங்கினார்.Rajini fans distribute Rajin mask
ஆனால், அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா ரூபத்தில் ரஜினியின்  ‘மூவ்’களுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. மார்ச் 24 முதல் ஊரடங்கு என்று ஆரம்பித்து, இன்று தமிழகத்தில் 70 ஆயிரம் கொரோனா கேஸ்கள், மீண்டும் ஊரடங்கு என்று கொரோனா ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பூதத்தின் விஷ்வரூபம் காரணமாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ரஜினி அறிவித்தப்படி அவருடைய படை இருக்குமா என்ற சந்தேகமும் பலரிடம் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்தப்படி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ரஜினி ரசிகர்கள் தற்போது குதித்துள்ளார்கள். விட்டதை தொடங்கும் உத்தியாக இதைத் தொடங்கியிருக்கிறாஅர்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல பகுதிகளில் உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. அரிசி, காய்கறி, சானிடைசர் என பல பதவிகள் வழங்கிய ரசிகர்கள், தற்போது முகக் கவசங்களையும் மக்களுக்கு வழங்கிவருகிறார்கள்.

Rajini fans distribute Rajin mask
 அப்படி வழங்கப்படும் முகக் கவசங்களில் ரஜினி படத்தை அச்சிட்டு, ‘அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை’ என்ற வாசகத்தையும் அச்சிட்டு வினியோகிக்கிறார்கள். “லாக்டவுன் மூலம் ஊரே முடங்கியுள்ள நிலையில், ரஜினியின் வாய்ஸை மக்கள் மத்தியில் இப்படி கொண்டு செல்கிறோம்” என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதுபோன்ற அச்சிடப்பட்ட முகக்கவசங்களை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் வினியோகம் செய்துள்ளார்கள். இந்த முகக்கவசங்களை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வினியோகிக்கவும் ரஜினி ரசிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் அதிகளவில் வினியோகம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios