ரஜினியையும், அரசியலையும் பிரிக்க முடியாது என அவ்வப்போது நிரூபணமாகி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக ரஜினியில் அசைவுகளும், செயல்களும் அரசியல் பின்னணி இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து விட்டாலும், 2021 சட்டமன்றத்தேர்தலில் குறிப்பாக தனது ஆதரவு யாருக்கு என்பதை புத்தாண்டு தினத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்து ஆன்மீக அரசியலிலே ஈடுபடுவார் எனவும், வரும் தேர்தலிலே அவர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவார் எனவும் அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்குவது இல்லை எனவும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். இதனால், ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.  

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவர் வரும் தேர்தலிலே யாருக்கு ஆதரவு கொடுப்பார் எனும் கேள்வி எழுந்துள்ளது என்பதும் இது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் இடையே பரபரப்பான கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றது. ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வகையில், அவரது ரசிகர் ஒருவர் மன உளைச்சலில் இறந்து போன சம்பவமும் நடந்துள்ளது.  இந்நிலையில், அவர் யாருக்கு ஆதரவு தரப்போகிறார் என்கிற கேள்வியும் எழுந்து வந்தன. 

அதற்கு விடையளிக்கும் வகையில், இன்று 2021ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததை அடுத்து ரஜினிகாந்த் வீட்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் கோலம் போடப்பட்டுள்ளது. இந்த கோலம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே ரஜினிகாந்த், செய்தியாளர்களை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பதிலளிப்பார். விளக்கம் கொடுப்பார். அதேபோல தனது ஆதரவை, புத்தாண்டு தினத்தில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு தனது ஆதரவு யாருக்கு என்று உணர்த்தி இருக்கிறார். அந்தக் கோலத்தில் இரட்டை இலை சின்னத்தை வரைந்து, அதன் மேல் மலர் கோலம் போட்டு இருக்கிறார்கள். 

 

இதனை விமர்சனம் செய்பவர்கள், இரட்டை இஅலை சின்னத்திற்கே தனது ஆதரவு என்பதை உணர்த்தி இருப்பதாக கூறுகிறார்கள். அடுத்ததாக அந்த மலர் பாஜகவின் சின்னத்தை குறிப்பதாக கூறுகிறார்கள். இதனை பகிர்ந்து அதிமுகவில்னர் பூரித்து வருகின்றனர்.