ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நேற்று கலைஞருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழ் திரை உலகினர் காமராஜ் அரங்கத்தில் நடத்தினர். அதில் பிரபலங்கள் மற்றும் சினிமா ஜாம்பாவான்கள் கலந்துக்கொண்டனர். 

நேற்றைய நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, 

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட இப்போது பதவியில் இருப்பவர்கள் பெரிய ஆட்களா? 

ஒரு கட்சியின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் இருப்பது மிகப் பெரிய ஆளுமையான கலைஞரால் மட்டுமே சாத்தியம்....அதிமுக அலுவலகத்தில் கலைஞர் படம் இடம் பெறவேண்டும். கலைஞர் இல்லாமல் அரசியல் செய்ய இயலாது என்ற நிலையை உருவாக்கியவர்....
மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியதற்கு மேல் முறையீடு செய்திருந்தால் நானே களம் இறங்கியிருப்பேன்.....சூழ்ச்சிகள் துரோகங்கள் அனைத்தையும் கடந்து கட்சியை வழிநடத்தியவர் கருணாநிதி...அதிமுக உருவானதே கருணாநிதியால்தான்..என்று பேசினார்.

“கடைசியில் தளபதி அவர்கள் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டது என்னால் தாங்க முடியல.....கவலை வேண்டாம்....உடன் பிறப்புகள் இருக்காங்க.. அப்பா வந்த பாதை உங்களை வழி நடத்தும்"...என ரஜினிகாந்த் மேடையில் கூற...தளபதிக்கு துக்கம் அடைத்துக்கொண்டு அவர்  கண் கலங்கி நின்றது.

ரஜினியின் பேச்சுக்கு இன்று பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மேலும், வரலாறை மறந்துவிட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்...ரஜினிகாந்த் பார்ட் டைம் அரசியல்வாதியாக இருந்து, முழுநேர அரசியல்வாதியாக மாற முயற்சிக்கிறார்...ஜெயலலிதா இல்லாத நிலையில் ரஜினிகாந்த் இத்தகைய கருத்துக்களை கூறுவது கோழைத்தனமானது, சந்தர்ப்பவசமானது...என்று கூறி உள்ளார்.