Asianet News TamilAsianet News Tamil

உயிரை பணையம் வைக்க முன் வராத ரஜினி.. பரிதாபத்தில் பாஜக... ஜோதிமணி கிண்டல்..!

இவருடைய இந்த அறிவிப்பால் அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அவரை பயன்படுத்த துடியாய் துடித்த பாஜகவிற்கு வேண்டுமானால் இழப்பு இருக்கலாம். 

Rajini did not come before to risk her life .. BJP in pity ... Jyoti Mani teased ..!
Author
Tamil Nadu, First Published Dec 29, 2020, 5:18 PM IST

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று ரஜினி அறிவித்து இருப்பதால் தமிழக அரசியல் களத்தில எந்த மாற்றமும் ஏற்படாது என்று காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் “ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பு, என்னைப் பொருத்தவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் அவர் அரசியலுக்கு வருவது ஒரு பெரிய தாக்கததை ஏற்படுத்துவதாக இருந்தால் மட்டுமே அவர் அரசியலுக்கு வரவில்லை எனும்போது தாக்கத்தை ஏற்படுத்தும்.Rajini did not come before to risk her life .. BJP in pity ... Jyoti Mani teased ..!

ரஜினி ஒரு கலைஞராக இந்த நூற்றாண்டில் கொண்டாடப் படவேண்டிய கலைஞர். அவர் உடல் நிலையைக் கருதி இந்த முடிவை எடுத்திருந்தால் அதை நான் மதிக்கிறேன். அதேநேரம் அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அதையும் நாம் மதிக்கிறோம்.

ஆனால் அவர் அரசியலுக்கு வரும்போது ஏன் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அவர் தொடர்ந்து பாஜகவின் குரலாகத்தான் தமிழகத்தில் ஒலித்திருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, தமிழகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம். அங்கு போராடிய மக்களை தீவிரவாதி என சித்தரித்தது தொடர்ந்து பாஜகவின் பாலிசிகளை ஆதரித்து இருக்கிறார்.Rajini did not come before to risk her life .. BJP in pity ... Jyoti Mani teased ..!

அவர் பாஜகவால் வலியுறுத்தி மிரட்டப்பட்டு அரசியலுக்கு அழைத்துவரப் படுகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தது. அவரது அறிக்கையை நீங்கள் பாருங்கள், முதலில் அவர் ரசிகர்களை சந்திக்கும் போது, எனது உடல்நிலை சரியில்லை என வந்த அறிக்கைகள் எல்லாம் உண்மைதான். ஆனால் அந்த அறிக்கை நான் விடவில்லை. எனது உடல்நிலை முக்கியம் நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னார்.

அடுத்து தமிழகத்துக்கு அமித்ஷா வந்து சென்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது என்னுடைய உடல்நிலையைப் பற்றி கவலைப் படவில்லை. எனது உயிரை பனயம் வைத்து தமிழக மக்களை காப்பாற்றப் போறேன் என்று சொன்னார். இப்ப திரும்பவும் நான் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று சொல்கிறார். ஒரு கட்டத்தில் உயிரை பணையம் வைப்பதாக சொன்ன ரஜினி, இப்போது ரிஸ்க் எடுக்க முடியாது என்று சொல்கிறார். Rajini did not come before to risk her life .. BJP in pity ... Jyoti Mani teased ..!

அவரது உடல்நிலையை கருத்தில் கொள்கிறார் என்றால் நாம் அதை மதித்துதான் ஆகவேண்டும. இவருடைய இந்த அறிவிப்பால் அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அவரை பயன்படுத்த துடியாய் துடித்த பாஜகவிற்கு வேண்டுமானால் இழப்பு இருக்கலாம். உறுதியாக திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்” என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios