ஆவின் நிறுவனத்தில், 430க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப இருக்கிறார்கள். இது தொடர்பாக, தன்னிடம் சரியான தகவல் தெரிவிக்காத, நிர்வாக மேலதிகாரியை இடம் மாற்ற வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முடிவு செய்து இருக்கிறார். 

பலமுறை முயற்சி செய்தும் அமைச்சரை மீறிய, அதிகாரிகளின் வட்ட அரசியலால் அவரை, 'டிரான்ஸ்பர்' செய்ய முடியவில்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதல்வரை நேரடியாக சந்தித்து இருக்கிறார். என் துறையில் இருக்கிற ஒரு அதிகாரியைக் கூட, என்னால் மாற்ற முடியவில்லை என பொங்கியிருக்கிறார். இதனையடுத்து தான், அந்த அதிகாரியை, இடமாற்றம்  செய்து இருக்கிறார்கள். இப்போது ராஜேந்திரபாலாஜி தரப்பு அமைதியாகி இருக்கிறது.