Asianet News TamilAsianet News Tamil

“சீக்கு வந்த ப்ராய்லர் கோழி... மது குடித்த குரங்கு..” - ராஜேந்திர பாலாஜி, வைகை செல்வன் வார்த்தை போரால் கப்பல் ஏறும் அதிமுக மானம்!!

rajendra balaji vs vaigai selvan
rajendra balaji vs vaigai selvan
Author
First Published Jun 28, 2017, 10:36 AM IST


சீக்கு வந்த ப்ராய்லர் கோழி.. அழுகிய தக்காளி சமையலுக்கு ஆகாது என்று வைகை செல்வனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டியதற்கு பதிலடியாக மது குடித்த குரங்கு என வைகை செல்வன் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலப்பட பால் விவகாரம் அமைச்சருக்கும் பால் முகவர் சங்ககளுக்கும் உள்ள மோதல் என்ற நிலை மாறி அமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுக்கும் உள்ள உட்கட்சி மோதலாக மாறியுள்ளது.

மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் பொது வெளியில் வசை மாரி பொழிந்து வருகின்றனர்.
பாலில் கலப்படம் என்று ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு சொந்த மாவட்டத்தில் பகை காரணமாக சம்மன் இல்லாமல் வைகை செல்வன் ஆஜரானார்.

rajendra balaji vs vaigai selvan

இதனால் இருவருக்குள்ளும் மோதல் உருவானது. “500 ரூபாய்க்கு கூலிக்கு பேசுபவர்” என்று ராஜேந்திர பாலாஜி கூற “நீ போஸ்டர் ஒட்டி பிழைத்தவன்” என்று வைகை செல்வன் கூற மோதல் பெரிதானது.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள்  கேட்டபோது ஆவேசம் அடைந்த அவர், வைகை செல்வனை தாறுமாறாக விமர்சித்தார். வைகைசெல்வன் ஒரு சீக்கு வந்த ப்ராய்லர் கோழி, அழுகிய தக்காளி சமையலுக்கு உதவாது. அவரை பற்றி பேசுவது வேஸ்ட் என்று கூறினார். ஆனாலும் வசை பாடினார்.

rajendra balaji vs vaigai selvan

இது பற்றி இன்று பேட்டியளித்த வைகை செல்வன் தன்னை விமர்சனம் செய்த ராஜேந்திர பாலாஜி அமைச்சர் என்பதை மறந்து மது குடித்த குரங்கு போல் கண்டதையும் பேசி வருகிறார். என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் யாரை பேசுகிறோம் என்பதை எல்லாம் மறந்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

உண்மைக்கு புறம்பான விசயங்களை பேசி வருகிறார். மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று கூறினார்.
சீக்கு வந்த ப்ராய்லர் கோழி.. மது குடித்த குரங்கு என்று அதிமுகவின் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவது அதிமுகவின் ஜெயலலிதா இல்லாத நிலையை சுட்டிக்காட்டுகிறது. அவர் இருந்தால் இவ்வாறு நடக்குமா என்று அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios