எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சிறுபிள்ளைத் தனத்திற்கு வெள்ளரிக்காயைக் கூடத் தருவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக பதிலளித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சிறுபிள்ளைத் தனத்திற்கு வெள்ளரிக்காயைக் கூடத் தருவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளைக் கொண்டு வர லண்டன், அமெரிக்கா என 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பதம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்தப்பேச்சுக்கு ’வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை’’ என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘’முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கையுடன் பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட தருவோம். தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது. முதலீடு விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது’’ என்று அவர் தெரிவித்தார்.