"ஒவ்வொரு நொடியும் பயந்து பயந்து, சாப்பிடவும் தூங்கவும் முடியாம அவரு ஓடி ஒளியுறதை நாடே கைகொட்டி வேடிக்கை பார்க்குது பாரு."
எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி மாதங்களில் ஒரு நாள் அது. ஆவின் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை ஒரு நிகழ்ச்சிக்கு ‘ரிப்பன் கட் பண்ண’ அழைத்திருந்தனர். அங்கே சென்ற அவர், கட் பண்ண கொடுத்த கத்திரிக்கோலை வைத்துக் கொண்டு, அங்கே அலங்காரத்துக்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை குத்தி குத்தி உடைத்து விளையாடினார். பக்கத்தில் நின்ற அவரது கட்சியினரும், விழாவை நடத்தியவர்களும் அந்த சேட்டைக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது? என புரியாமல் பொத்தாம் பொதுவாக சிரித்து, நெளிந்து வைத்தனர்.

இந்த குறும்பு சம்பவம் வாட்ஸ் ஆப்பில் வைரலானபோது மக்களோ ‘வெளயாட்டுப் பிள்ளையா இருப்பார் போல! என்று பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜியோ ஒரு விவகாரப் பிள்ளை என்பது இதோ தி.மு.க. ஆட்சியில் அவர் மீது குவியும் ‘நிதி மோசடி’ புகார்கள் மூலமாக புரியவருகிறது. ‘கவர்மெண்ட் வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி லட்சக்கணக்குல பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டார்’ என்ற புகார்களை மையப்படுத்தி பழைய பால் பாலாஜியை தேடிக்கொண்டிருக்கின்றன தனிப்படை போலீஸ் டீம். கிட்டத்தட்ட பத்து நாட்களாக போலீஸின் கையில் சிக்காமல் எஸ்கேப்பாகி கொண்டே இருக்கிறார் பாலாஜி.
இதை வைத்து ’எங்க அண்ணனை நெருங்கமுடியுமா உங்களால? நெருப்புடா அவரு நெருப்பு. ஒரு அரசாங்கத்தையே அலறவிட்டுட்டு இருக்காருப்பே’ என்று ராஜேந்திரபாலாஜியின் அடிப்பொடிகள் தாறுமாறாக சோஷியல் மீடியாவில் அள்ளிக் கொட்டிக் கொண்டுள்ளனர் கமெண்ட்ஸை.

இதற்கு பதிலடி தரும் தி.மு.க.வின் இணையதள அணியினரோ….”அடேய் லூஸு பாய்ஸ்! உங்க அண்ணனை அசால்டா தூக்குறதுக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது. ஆனா, அவரை நின்னு ஒரு கிண்ணம் தண்ணி குடிக்கிறதுக்கு கூட வழியில்லாம, மே மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடவிட்டுட்டே இருக்கோம் பாரு! அதுதான் மேட்டரு. கோழிய அமுக்குற மாதிரி மொத நாளே அமுக்குறதுல போலீஸுக்கு எந்த சிக்கலுமில்லை. ஆனா, இப்ப போலீஸ் வந்துடுமோ? அப்ப வந்துடுமோ?ன்னு ஒவ்வொரு நொடியும் பயந்து பயந்து, சாப்பிடவும் தூங்கவும் முடியாம அவரு ஓடி ஒளியுறதை நாடே கைகொட்டி வேடிக்கை பார்க்குது பாரு. அதுதான் வேணும்யா என் சிப்ஸு’ என்று நக்கலை தெறிக்கவிட்டுள்ளனர்.
சரி யதார்த்த நிலைக்கு வருவோம்!... உண்மையான கெத்து யார்? சிக்காமல் தப்பிக்கும் ராஜேந்திர பாலாஜியா அல்லது ஓட ஓடவிட்டு வேடிக்கை பார்க்கும் போலீஸா?
