கடந்த  மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி சின்னாபின்னமானதில் முதலிடத்தில் இருந்தது கி.வீரமணி தான், கலைஞர், மறைந்ததும் அழகிரிக்கு ஸ்டாலினுக்கும் இடையே குடும்பப் பிரச்சனையால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டதால், கருணாநிதி சமாதிக்கு வந்த வீரமணியிடம் தாய்க்கழகமான திராவிடர் கழகம், திமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என சொன்ன அவரிடம். அழகிர்யைபற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த கி.வீரமணி, வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம் கோபமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீரமணியின் பேச்சால், காண்டான அழகிரியின் மகன் துரை தயாநிதி டிவீட் போட்டார் அதில்,  காலம் காலமாக திமுக விலும், அதிமுக விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன் என ஒரே டிவீட்டில் வீரமணியை மரண கலாய் கலாய்த்து தள்ளியதால், இந்த "ஓசி சோறு" மேட்டர் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியாக அமைந்தது.

இந்நிலையில், கமலின் இந்து தீவிரவாதி பேச்சு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது வீரமணி பற்றிய கேள்வி கேட்டதற்கு வீரமணி வெளங்காதவன் என தடாலடியாக சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு தவியதும், அடுத்து கி.வீரமணியை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் டம்மியாக்கி கலாய்த்தார்.

கடந்த ஆண்டின் ஓசி சோறு மேட்டரை போலவே இப்போது வெளங்காதவன் என்ற வார்த்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டையாக அமைந்துள்ளது. அதேபோல அமைச்சர் சொன்னதும் சமூகவலைத்தளங்களில் வெளங்காதவன் என்ற வார்த்தை டிரெண்ட் ஆகியுள்ளது.