Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !!

இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை அந்நாடுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
 

rajeev chandrasekhar mp's tweet to britain
Author
Bangalore, First Published Jun 11, 2019, 9:55 AM IST

இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை அந்நாடுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.rajeev chandrasekhar mp's tweet to britain

கிழக்கிந்திய கம்பெனி மூலம் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்து கொஞ்சம், கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதையும் வளைத்துப் பிடித்தது.
வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இங்கிலாந்து , ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. உதாரணமாக கோகினூர் வைரம் போன்ற அற்புதமான சொத்துக்களை இங்கிலாந்து  நாட்டுக்கு அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.ஆனால் அவர்கள் எடுத்துச் சென்ற சொத்துக்களை திரும்ப கொண்டு வர இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. rajeev chandrasekhar mp's tweet to britain

தற்போது பாஜக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசு அந்த சொத்துக்களை திரும்பவும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திருடிச் சென்ற சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்க இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஹாலந்து, போர்ச்சுக்கல், ஃபிரான்ஸ்  போன்ற நாடுகள் இந்திய மக்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்துக்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios