ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையைத் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க பாஜக தன்னுடைய அதிரடி ஆட்டத்தை சச்சின் பைலட் மூலம் காய்நகர்த்தியது. சச்சின் பைலட்டும் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு டெல்லிக்கு பயணமானார். அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தியை சந்திக்சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி தனக்கு மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். இதனால் அவரது பதவி தப்பியது. இந்தநிலையில் தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் துரோகம் செய்த குந்தகம் விளைவித்த துணை முதல்வர் சச்சின் பைலட் அவர் வகித்து வந்த துணை முதல்வர் சச்சின்பைலட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

"ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையைத் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  ராஜஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநிலத் துணை முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து மௌனம் கலைத்த சச்சின் உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சச்சின் பைலட் நீக்கம் குறித்து முதல்வர் அசோக் கெலாட் பேசும் போது.."பைலட் கையில் எதுவும் இல்லை, அனைத்தும் பாஜகவின் ஏற்பாடு" என்றார்.