முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சச்சின் பைலட் ஆதரவு காங்.எம்.எல்.ஏ.க்களிடம், பா.ஜ. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங். முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி , கட்சி பதவி ஆகியன பறிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் ஆளும் காங்.கிற்கு ஆதரவாக பா.ஜ. முக்கிய தலைவரான வசுந்தரா, அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டதாக வெளியான தகவலால் பா.ஜ. வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பா.ஜ. கூட்டணியில் உள்ள ராஷ்டீரிய லோக்தந்த்ரிக் கட்சி தலைவரும் எம்.பி.யுமான அனுமன் பெனிவால் தனது டுவிட்டரில் பதிவில்...


"ராஜஸ்தான் காங்.கில் குழப்பம் நிலவியுள்ள இந்நேரத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ. முதல்வர் வசுந்தரா ராஜே , தனக்கு நெருங்கிய தொடர்பிலுள்ள ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ள சிகார், நகார் பகுதியைச் சேர்ந்த சச்சின் பைலட் ஆதரவு காங். எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களை, அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தரும்படியும், சச்சின் பைலட்டிடம் இருந்து விலகி இருக்கும்படியும் கேட்டு கொண்டார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.