அம்மா நினைவிடத்தில் "மீண்டும் ஓபிஎஸ்"..! வெளிவந்த பகீர் மர்மம் இதுதானா..? 

ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மதுரையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  எம்.எல்.ஏக்கள் அம்மா  நினைவிடத்திற்கு செல்ல வில்லை. ஆனால் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருடைய மகன் ஓ.பி.ஆர் மட்டுமே அம்மா நினைவிடத்திற்கு சென்று வந்தனர்..

அதிமுகவின் தோல்விக்கு காரணமே இரண்டு தலைமை இருப்பதே..இரண்டு தலைமை இருப்பதால் விரைவாக எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்த முடியவில்லை...தினகரன் என்ற மாயை தற்போது இல்லை என்பது தெரிந்துவிட்டது.. அதிமுகவிற்கு ஒரே ஒரு தலைமை தேவை...."ஒரே தலைமை உருவாக்குவது" பற்றி வரும் அதிமுகவின் பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை.. என அடுக்கடுக்கான குற்றசாட்டை முன் வைத்தார். 

எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ-வான ராஜன் செல்லப்பா.. திடீரென இவ்வாறு சில கருத்துக்களை அதிரடியாக முன்வைத்துள்ளது பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிற்கு ஒரே தலைமை வேண்டும் என்றால்..? அது பன்னீர் செல்வமா? அல்லது  எடப்பாடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் அம்மாவால், அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தான் தலைமை ஏற்க வேண்டும் என ராஜன் செல்லப்பா குறிப்பிட்டு உள்ளதை வைத்து பார்க்கும் போது, ஒரு வேளை துணை முதல்வர் பன்னீர் செல்வதை தான் குறிப்பிடுகிறாரா ? என்ற பாணியில் உள்ளது. 

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், ஆரம்பத்தில் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏவாக இருந்த ஆர். பி உதயகுமார் தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனது மகன் ஓபிஆர் உடன் அம்மா நினைவிடத்திற்கு சென்று வணங்கினார் ஓபிஎஸ். அப்போது அவருடன் ஆர். பி உதயகுமாரும் இருந்தார். அவ்வளவு ஏன்? ஓபிஎஸ் டெல்லி சென்றாலும் உதயகுமார் உடன் சென்று விடுகிறார் என்றால் பாருங்களேன்.. எப்படிப்பட்ட ஆதரவை நல்குகிறார் உதயகுமார். தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஆர் அவர்களுக்கு கிடைக்க இருந்த மினிஸ்டர் பதவி பறிபோனதற்கு காரணம் எடப்பாடி தான் என்ற ஒரு பேச்சும் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் எஸ் பி வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா என அனைவரும் எடப்பாடி ஆதரவாக அறியப்பட்டவர்கள்.இந்த நிலையில், ஒரே தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் எனவும், அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் தான் தலைமை ஏற்க வேண்டும் எனவரும் ராஜன் செல்லப்பா தெரிவித்து இருப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, எடப்பாடி ஆதராக இருந்துகொண்டே, ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறாரா ? அல்லது இவர்கள் யாரும் தலைமை வகிக்க வேண்டாம்... வேறு யாராவது தலைமை வகிக்க வேண்டும் என உள்பேச்சுவார்த்தை நடந்து மற்றொருவரை முன் நிறுத்த திட்டம் போட்டு உள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் நன்னடத்தை அடிப்படையிலும் இன்னும் ஒரு வருட காலத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளிவரவும் வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் தகவல். இருந்த போதிலும் தினகரன் என்ற மாயை தற்போது இல்லை என்றும் தெரிவித்து உள்ளார் ராஜன் செல்லப்பா. அப்படி என்றால் யாரை தான் கொக்கி வைத்து பேசி வருகிறார் ராஜன் செல்லப்பா என்பது புரியாத புதிராக உள்ளது.

ஏற்கனவே, எடப்பாடிமற்றும் பன்னீர் தலைமையில்சில கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்து வரும் சமயத்தில், மீண்டும் தர்மயுத்தம் போன்று, வெற்றி பெற்ற மற்ற அதிமுக எம்எல் ஏக்கள் அம்மா சமாதிக்கு செல்லாத நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபிஆர் மட்டுமே அம்மா நினைவிடத்திற்கு சென்று வந்துள்ளனர். எனவே ராஜன் செல்லப்பா சொல்வதை வைத்து பார்க்கும் போது மீண்டும் தர்மயுத்தம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்ற சூழல் இருக்குமோ என விமர்சனம் செய்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்மொத்தத்தில் ராஜன் செல்லப்பாவின் பேட்டி மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதா..? அல்லது குழப்பியபடி அவர் பேட்டி அளித்து உள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.