எந்த தடையும் எங்களுக்கு விதிக்கவில்லை... பாஜகவிற்கு பதிலடி தருவதையே அதிமுக தலைமை விரும்பும்-ராஜ் சத்யன் அதிரடி
அதிமுக-பாஜக இடையே கூட்டணி முறிவடைந்துள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை கூறியதாக வெளியான தகவலை ராஜ் சத்யன் மறுத்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மறைந்த அதிமுக பொதுச்செயாலளர் ஜெயலலிதா, அறிஞர் அண்ணா ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே முற்றிய வார்த்தை போரால் கூட்டணி முறிந்துள்ளது.
இந்தநிலையில் பாஜகவுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜகவைப்பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டாம், சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த தகவலை அதிமுக மூத்த நிர்வாகிகள் மறுத்துள்ளனர்
இது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மண்டல செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை” எங்கள் தலைமை எந்த தடையும் எங்களுக்கு விதிக்கவில்லை… எங்கள் தலைவர்களை, எங்கள் அடையாளத்தை , எங்கள் கொள்கைகளை யார் அவமதித்தாலும் , அவர்களுக்கு தக்க பதிலடி தருவதையே எங்கள் தலைமை விரும்பும் ,
அதுவே கழக பொதுச்செயலாளரின் ஆணை எனக்கொண்டு எவர்வரினும் பகைமுடிப்போம். எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை செய்தியாக வெளியிடுவதான் உங்கள் ஊடக தர்மமா? என ராஜ் சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பிஜேபியை திட்டுவீங்களா, மாட்டீங்களா ? கரெக்டா சொல்லுங்க என சவுக்கு சங்கர் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த ராஜ் சத்யன், கண்டிப்பாக திட்டுவோம், நாங்கள் தெய்வம் என நினைக்கும் எங்கள் தலைவர்களை அவர்கள் சிறுமைப்படுத்த சிறுபிள்ளைத்தனமாக பேசும்போது , இவர்களோடு கொஞ்சி கூட்டணியா பேச முடியும் என பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்