rain occur one or two places in tamilnadu and pudhuchery said cmd
தமிழகத்தில் அடுத்து ஒரு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், எனினும் சென்னையில் பலத்த அல்லது கன மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக லேசான மழை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். 14,15 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் லேசான மழை இருக்கும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை மற்றும் காலை நேரத்தில் பனிப் பொழிவு அதிகம் இருக்கும். அதிக பட்ச வெப்ப நிலையாக 33 டிகிரியும், குறைந்த பட்சமாக 24 டிகிரியும் வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
