Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு எதற்கு? அட்டகாசமான விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

தற்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது? எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 

Raid as per DMK election promise .. Minister Senthil Balaji ..!
Author
Coimbatore, First Published Jan 23, 2022, 5:33 AM IST

கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருக்கிறோம். அதைத்தான் இப்போது அரசு நிறைவேற்றி வருகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகளுடன் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். பின்னர்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 படுகைகள் ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை கொண்டதாக உள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் நோய்த் தொற்றுப் பரவலைக்  கட்டுப்படுத்த  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

Raid as per DMK election promise .. Minister Senthil Balaji ..!

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன்படி கடந்த ஆட்சியில் தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர்கள் காட்டினார். 

Raid as per DMK election promise .. Minister Senthil Balaji ..!

ஆனால் தற்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது? எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios