* தினகரன் அணியிலிருந்து மாஜி எம்.எல்.ஏ.க்கள் பதினைந்து பேர், தி.மு.க.விலிருந்து மாஜி முக்கியஸ்தர்கள் சிலர் அ.தி.மு.க.வுக்கு தாவுவதாக தகவல்: செய்தி (கழக ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்துக்கு... அங்கிட்டு இங்கிட்டு இருந்து மாஜிக்கள் உங்க கட்சிக்கு வர்றப்ப, இங்கேயிருந்து சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அங்கே எஸ்கேப் ஆகும் வாய்ப்பு உள்ளதாக தகவலுங்கோ!)

* அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது: செய்தி. (அடேங்கப்பா, இந்த முரட்டு தைரியத்துல தமிழ்நாடு, பாண்டி தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலேயும் அ.தி.மு.க. கண்ண மூடிட்டு போட்டி போட்டு, தாறுமாறா ஜெயிக்கலாமுன்னு சொல்லுங்க. யாருக்கு கிடைக்கும் இந்த லக்கு!?)

* கனிமொழிக்கு எதிராக சரத்குமாரை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் களமிறக்கி, தி.மு.க.வின் வெற்றியை தடுக்க எடப்பாடியார் திட்டம்: செய்தி. (என்னண்ணே இப்புடி யோசிக்கிறீங்க? சரத்குமாரையெல்லாம் நீங்க சோனியா, ராகுலுக்கு எதிராவே நிறுத்தி வட இந்தியாவையே தெறிக்க விடலாமே? வேஸ்ட்டு பண்ணாதீங்க நம்ம நாட்டாமையோட பவரை!)

* காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் சில தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த கூட்டணி வாகனத்தின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருப்பவருக்கு, பழகுநர் உரிமம் கூட இல்லை. அதனால் வண்டி எந்த பள்ளத்தில் கவிழும்னு கூட தெரியாது: பா.ஜ.க. மத்தியமைச்சர் அப்பாஸ் நக்வி.(தல, உங்க கூட்டணி டிரைவர் அப்படியே ரோட்டை விட்டு, ஆகாசத்துல பறந்து, செவ்வாய் கிரகம் போயி ஆன் தி வே மில்க்கி வேயில லேண்டாகி உங்களையெல்லாம் அசத்தியிருக்காருல்ல! நம்ம நிலைமையே தொங்கல்ல இருக்குறப்ப, அடுத்தவன பத்தி என்ன கிண்டலு?)

* பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸை விட்டால் வேறு கட்சி இல்லை என்பது சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால், ராகுல்தான் பிரதமர்: சசிதரூர். (ரைட்டு சைத்தான் சைக்கிள்ள பெடல் போட ஆரம்பிச்சிடுச்சு, மறுபடியும் அமைச்சரவையில் சேர்ந்து, மறுபடியும் ஒரு கல்யாணத்த பண்ணி, மறுபடியும் மறுபடியும் சில சித்து வெளாட்டுக்களை காட்டாம அடங்காது போலிருக்கேடா?!)