*    கவர்னர் காலம் தாழ்த்துவது சரியில்லை. ஏழு தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்:     ராமதாஸ். 
(ரைட்டு, டாக்டர் ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுட்டாரு. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி பேசியே  பி.ஜே.பி.க்கு எதிரா எடப்பாடி வகையறாவை தூண்டிவிட்டு, உள் அடிதடிக்கு அஸ்திவாரம் போடப்பார்க்கிறார்)

*    ஏழை குடும்பங்களுக்கு மாதம்     ஆறாயிரம் ரூபாய் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் வறுமையை ஒழித்துவிட முடியுமா?: மாயாவதி.
(ஊர் முழுக்க யானை சிலையை ஆயிரங்கோடி செலவுல வெச்சா, டூரிஸம் பிய்ச்சுகிட்டு, வருவாய் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமுன்னு நீங்க சொன்னதை மக்கள் நம்பலையா? அது மாதிரிதான் இதுவும் மாயா மேடம்.)

*    என்னை கைது செய்தால் தேவையற்ற பதற்றம் உருவாகும்: கமல்ஹாசன்.
(சபாஷ் தல, இப்பதான் நீங்க இந்த மண்ணோட அரசியல்வாதியாகி இருக்கீங்க. ‘சட்டம் தன் கடமையை செய்யட்டும், நான் கைதானாலும் அமைதியாக இருங்கள். காந்தியின் கொள்ளுப்பேரரனான எனக்கு அஹிம்சை ஒன்றே வழி, என் பிள்ளைகளான உங்களுக்கும் அது மட்டுமே வழி!’ன்னு நீங்க சொல்லியிருந்தா ‘மாற்று அரசியல்’ கமல்ஹாசன். ஆனால் இப்படி சொன்னதாலே நீங்க வழக்கமான ‘மட்ட அரசியல்’ கமல்தான்.)

*    ’என் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்’ அப்படின்னு எடப்பாடியார் புலம்புறார். அவர் ஆட்சியை யாரும் கலைக்க வேண்டாம், மே 23-ல் தானாகவே அது கலையும்: ஸ்டாலின்
(மே 23-க்குள் இந்த ஸ்லோகனை தமிழகத்தின் நான்கு திசையிலும் போய் நின்னு, ஆயிரத்தோறு தடவை ஜெபிச்சால், நீங்க முதலமைச்சர் ஆகிடுவீங்கன்னு எந்த ஜோஸியரும் சொன்னாரா தளபதி. உடைஞ்சு போன டேப்ரெக்கார்டர் மாதிரி அதையே ரிப்பீட் பண்றீங்க?)


*    மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைக்க கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் ஒரே இலக்கு. பிரதமர் பதவி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை: குலாம் நபி ஆஸாத். 
(தல, நீங்க கவலைப்படலை. ஆனா நீங்க இப்படி பேசுற விஷயம் ராகுலுக்கு தெரியுமா? பப்பு புள்ள, பதவியேற்பு விழாவுக்காக புதுசா நாலு செட் பைஜாமா தைச்சு வெச்சிருக்குது, அதுல சோனியா வேற பூ டிஸைன் போட்டு வெச்சிருக்காங்கன்னு உளவுத்துறை தகவல்.)