நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசி முடித்த பிறகு ராகுல் காந்தி யாரை பார்த்து கண்ணடித்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் சுமார் அரை மணி நேரம் பேசினார் ராகுல். அவரது பேச்சை ஏற்க மறுத்து பா.ஜ.க எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது. மக்களவை கூடிய பிறகும் ராகுல் காந்தி தனது அதிரடி பேச்சை தொடர்ந்தார். அப்போதும் கூட மோடி அரசுக்கு எதிரான தனது சரவெடி பேச்சில் சிறிது கூட டெம்போ குறையாமல் பார்த்துக் கொண்டார். இதனால் பா.ஜ.க எம்.பிக்கள் அமளியை தொடர்ந்த நிலையிலும் ராகுல் தனது கருத்துகளை ஆனித்தனமாக ராகுல் எடுத்து வைத்தார்.

இறுதியாக தனது இருக்கையில் அமர்ந்த பிறகு ராகுல் செய்தது தான் சமூக வலைதளங்களில் தற்போது கன்னா பின்னாவென்று வைரலாகி வருகிறது. அதாவது தனது பேச்சை நிறைவு செய்த பிறகு ராகுல் காந்தி தனது இருக்கையில் புன்னகைத்தவாறே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தனது இடதுபுறம் திரும்பிய ராகுல் காந்தி மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு சவால் விடும் வகையில் அசத்தலாக கண் அடித்தார்.

   ராகுல் காந்தி புன்னகைத்தவாறே கண்ணடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதாவது தான் நினைத்ததை வெற்றிகரமாக பேசிவிட்டதாக சைகை கொடுக்கும் வகையில் ராகுல் அப்படி கண்ணடித்ததாக சொல்லப்படுகிறது. சரி, யாரைப் பார்த்து ராகுல் கண் அடித்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

   இந்த கேள்விக்கும் பதில் உடனடியாக கிடைக்கவில்லை. வீடியோவை நன்கு பார்த்த போது தான் ராகுல் காந்தி தனது நண்பரும் எம்.பியுமான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை பார்த்து கண் அடித்தது தெரியவந்துள்ளது. அதாவது மக்களவையில் என்ன விஷயங்களை எல்லாம் பேச வேண்டும் என்று ராகுல் தனது நண்பர் சிந்தியாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் பேசப்பட்டதை எல்லாம் சரியாக செய்து முடித்த திருப்தியில் சிந்தியாவை பார்த்து ராகுல் கண் அடித்துள்ளார்.