தமிழக அரசியலையும் தாண்டி, தேசிய அரசியலிலும் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் அவதானித்து சொல்லும் சில முக்கிய அரசியல் மூவ்கள் அப்படியே நடக்கின்றன!

கருணாநிதியின் மறைவுக்குப் பின்னும், தி.மு.க. தலைவர் எனும் புது பொலிவுடனும் முதல் முறையாக டெல்லியில் கால் வைக்கும் ஸ்டாலின் சாதிப்பாரா? சறுக்குவாரா? என்று எழுந்த விவாதத்தை,  அவர் அங்கே இருக்கும் நாளிலேயே எழுதி தெறிக்கவிட்டிருந்தோம். அதேபோல் இந்திராகாந்தியில் துவங்கி ராகுல் வரை அந்த குடும்பத்துக்கு ஸ்டாலினை பிடிக்காது. ஆனால்! ஸ்டாலின் டெல்லி வந்து தங்களை சந்தித்த மறுநாள் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருந்த நிலையில் ‘ஸ்டாலின் சென்டிமெண்ட்’ எனும் புது டிரெண்டை சோனியா மற்றும் ராகுல் இருவரும் ரசிக்க துவங்கியுள்ளனர்! என்பதையும் தனி கட்டுரையில் வெளியிட்டிருந்தோம். 
 
A.N.தமிழ் இணையதளத்தின் இந்த அதிர்புதிரி கட்டுரைகள் தமிழகம் தாண்டி டெல்லி வரையில் தமிழ் தெரிந்த அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தக் கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டிருந்தது போலவே ஸ்டாலின் - ராகுல் இருவரின் திடீர் நெருக்கம் புதிய விளைவுகளை உருவாக்க துவங்கியுள்ளது. அதாவது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த இரண்டு தலைவர்களின் திடீர் நெருக்கம் ஒருவித அதிருப்தியை கிளப்பியிருக்கிறது! என்கிறார்கள். 

அதாவது ராகுல், சோனியா இருவருமே ஸ்டாலினை  சில நாட்களுக்கு முன்பு வரை கண்டுகொள்ளாமல் தான் இருந்தனர். ஆனால், சென்னைக்கு ஸ்டாலின் வீட்டிற்கே வந்து அவரை சந்தித்த நாயுடு, ‘மோடிக்கு நிகரான அரசியல் திறன் வாய்ந்தவர் ஸ்டாலின். மதவாதத்துக்கு எதிரான கூட்டணி தளத்தில் ஸ்டாலினுக்கு நிச்சயம்  தேசிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படும்.’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்த கூட்டணியில் ஸ்டாலினை உயர்த்திப் பிடிக்க துவங்கியதே நாயுடுதான். இதை  ராகுல் வட்டாரம் ரசிக்கவில்லை என்றும் தகவல். 

ஆனால் ஸ்டாலினின் டெல்லி விசிட்டிலோ நிலை தலைகீழாக மாறியது. ஸ்டாலின் சென்டிமெண்டால் ஈர்க்கப்பட்ட ராகுல் அவருக்கு பெரும் முக்கியத்துவம் தர துவங்கியிருக்கிறார். டெல்லியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சோனியா, மன்மோகனுக்கு அடுத்து ஸ்டாலினை உட்கார வைத்து அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கிவிட்டார் ராகுல். இதன் மூலம் தேசிய தலைவர்களின் வரிசையில் தடாலடியாய் இணைந்துவிட்டார் ஸ்டாலின்.  

அவருக்குப் பிறகுதான் நாயுடுவுக்கு சேர். ஸ்டாலினுக்கு திடீரென தரப்படும் இந்த முக்கியத்துவம் நாயுடு, மம்தா, தேவகவுடா, மம்தா உள்ளிட்டோரை புருவம் உயர வைத்துவிட்டது. அதிலும் நாயுடுதான் ஓவர் ஃபீலிங்கில் இருக்கிறார் என்கிறார்கள். இந்த தேசத்தின் முக்கிய முதலமைச்சர்களில் தான் முதன்மையானவன், அதிகபட்ச பாதுகாப்பு வட்டத்தினுள் இருப்பவன், தெலுங்குதேசம் கட்சியின் நெடுநாள் தலைவன், இதையெல்லாம் தாண்டி ஸ்டாலினுக்கு முதன் முதலில் கைகொடுத்து உயர்த்தியவனே தான் தான்.

ஆனால் தமிழத்தின் எதிர்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க.வின் தலைவராக சமீபத்தில்தான் உருவெடுத்துள்ள ஸ்டாலினை இப்படி தடாலடியாக தேசிய அளவில் ராகுல் உயர்த்தியதை நாயுடு விரும்பவில்லை! என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.