Asianet News TamilAsianet News Tamil

பல மொழிகள் பலவீனம் கிடையாது... அமித் ஷாவுக்கு ராகுல் பஞ்ச்!

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  காங்கிரஸ் கட்சியும் அமித்ஷாவின் கருத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Rahul gandhi reply to Amith sha on language issue
Author
Delhi, First Published Sep 16, 2019, 9:49 PM IST

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.Rahul gandhi reply to Amith sha on language issue
டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு இந்தி தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்‌ஷா, “பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடிப்படை. என்றாலும், ஒரே மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது கலாசார ரீதியாக இந்தியாவை ஒன்றிணைக்கும். இந்தியை இந்தியாவின் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மொழிகளை அழித்து இந்தியை வளர்க்க இதைக் கூறவில்லை” என்று தெரிவித்தார்.Rahul gandhi reply to Amith sha on language issue
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  காங்கிரஸ் கட்சியும் அமித்ஷாவின் கருத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.Rahul gandhi reply to Amith sha on language issue
அதில், “இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது”என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒரியா, மராத்தி, கன்னடா, இந்தி, தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, பெங்காலி, உருது, பஞ்சாபி, கொங்கனி, மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாமி, போடோ, டோக்ரி, மைத்தி, நேபளி, சமஸ்கிருதம்,. காஷ்மீரி, சிந்தி, மணிப்பூரி, சாந்தலி என ஒவ்வொரு மொழியையும் குறிப்பிட்டு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios