கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 71 குழந்தைகள் இறந்த துயரம் என்பது மாநில அரசே உருவாக்கியது. இதை முதல்வர் ஆதித்யநாத் மூடி மறைக்க கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

கோரக்பூர் பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என்று கூறப்பட்டபோதிலும், அதை மறுக்கும் மாநில அரசு, குழந்தைகளுக்கு மூளை அழற்சி நோய் ஏற்பட்டதன் காரணமாகவே மரணமடைந்தனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் குழந்தைகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிடவும்ராகுல் காந்தி நேற்று கோரக்பூர் வந்திருந்தார். அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தபின் நிருபர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் அவர் கூறியதாவது-

70 குழந்தைகள் மரணம் என்பது, உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் நடந்த துயரம் அல்ல. தேசிய அளவிலான துயரம். நாட்டின் சுகாதாரம், மருத்துவம் இருக்கும் சூழலை இந்த சம்பவம் அடையாளமாகக் காட்டுகிறது. இதுபோல்செயல்படக்கூடாது.

பிரதமர் மோடி புதிய இந்தியா பற்றி பேசுகிறார். எங்களுக்கு இதுபோன்ற புதிய இந்தியா வேண்டாம். ஏழைமக்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றால், திரும்பி வரும் போது புன்னகையுடன் வர வேண்டும் அந்த புதிய இந்தியாதான் வேண்டும்.  

இந்த துயரம் என்பது அரசே உருவாக்கிய துயரம். இந்த மருத்துவமனைக்கு நிதி உதவி தேவை என்று மோடியிடம் தெரிவித்தேன். ஏராளமான பிரச்சினைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்பதுதௌிவாகத் தெரிகிறது.  இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பதிலாக, முதல்வர்ஆதித்யநாத் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.