Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா நாட்டுப்பற்று... பாகிஸ்தானை பாராட்டி இந்தியாவை இழிவுபடுத்திய ராகுல்காந்தி..!

கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது கடும் சர்ச்சையாகி வருகிறது.
 

Rahul Gandhi praised Pakistan and insulted India
Author
Delhi, First Published Oct 16, 2020, 5:33 PM IST

கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது கடும் சர்ச்சையாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 - 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது. சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. Rahul Gandhi praised Pakistan and insulted India

இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டரில், பா.ஜ.க, அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது. பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் ட்விட்டரில் இந்திய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ராகுல்காந்தி ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகின. Rahul Gandhi praised Pakistan and insulted India

''அந்த நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றால் ராகுல் காந்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போய் வாழ வேண்டும். நீங்கள் அங்கு வேண்டுமானால் பிரதமர் ஆகலாம்’’ என தெரிவித்துள்ளார் ஒருவர்.  மற்றொருவர், ''இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு, அவர் குறிப்பிட்டு சொல்லும் மற்ற நாடுகளின் மக்கள் தொகை எவ்வளவு, இந்தியாவில் முடிந்தளவு கொரோனா இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். அரசின் செயல்பாடுகளை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற நாடுகளை உயர்த்தி பிடிக்கிறேன் என நம் நாட்டின் மதிப்பை குறைக்காதீர்கள்'' என  கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios