rahul gandhi meets karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா மற்றும் வைர விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் பயணத்தை ஒத்திவைத்தார். அவருக்கு பதிலாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்தார்.

பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டாலின், ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் ஆகியோர் ஒரே காரில் பயணித்தனர்.

வைரவிழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கிண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ராகுல்காந்தி தங்கினார்.

இதைதொடர்ந்து இன்று காலை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.