காங்கிரஸுக்கென்று ஒரு தேர்தல் ஃபார்முலா இருந்தது. அதாவது கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி, சீட் எண்ணிக்கையை முடிவு செய்வதில் தாமதம், அதில் தொகுதிகளை தீர்மானிப்பதில் லேட்டோ லேட், கட்டக் கடைசியாக  வேட்பாளர்களை அறிவிப்பதில் அநியாய தாமதம். 

ஆனால் காங்கிரஸின் பேரியக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம் ராகுல் பல விஷயங்களில் அதிரடிகளை அரங்கேற்றிக் கொண்டுள்ளார். அதில் முக்கியமாக தேர்தல் பணிகளை விரைந்து முடிப்பதும் ஒன்று. அந்த வகையில்தான் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கான இடங்களின் எண்ணிக்கை மிக விரைவாக பேசிமுடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டும் விட்டது. 

இந்த ஜெட் வேகத்திற்கு ஸ்டாலின் காரணம் என்றால் அதற்கு உந்தியது ராகுல்தான். இந்த சூழல் இப்படியிருக்க, வேட்பாளர்கள் விஷயத்திலும் ஒரு அதிரடியை கொண்டு வந்திருக்கிறார் ராகுல். அதன்படி தேசம் முழுவதுமான காங்கிரஸின் மொத்த வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இளம் மற்றும் புதிய நபர்களாகதான் இருக்க வேண்டும் என்று மிக மிக கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளாராம். அதன்படி தமிழத்தில் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்கப்போகிறார்கள். 

இளைஞர்களாக இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் கட்சியில் ஏற்கனவே ஒரு பதவியை வகித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு  கிடையாது! என்பதிலும் ராகுல் தெளிவாக இருக்கிறார். இதனால் ‘விக் மற்றும் டை’தலையுடன் ‘நான் இளம் அரசியல்வாதிதான்.’ என்று சீன் போடும் நபர்களுக்கு காங்கிரஸில் வேட்பாளர் வாய்ப்பு மூன்று தொகுதிகளில் இருக்காடு, உண்மையிலேயே புதிய மற்றும் இளம் நபர்களுக்குதான் அந்த வாய்ப்பு கிட்டும்! என்கிறார்கள். 

ராகுலின் அதிரடியால் சூழ்நிலை இப்படிப் போய்க் கொண்டிருக்க, யார் அந்த மூன்று இளம் வேட்பாளர்கள்? என்று அறிவதில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சீனியர் நிர்வாகிகளான கே.எஸ்.அழகிரி, சிதம்பரம், இளங்கோவன், அரசர், தங்கபாலு உள்ளிட்ட பலர். அதே நேரத்தில் அவர்களை வேறொரு பிரச்னையும் போட்டு ஆட்டுகிறது. அது....மூன்று சீட் இப்படி புது ஆளுங்களுக்குப் போயிடுச்சுன்னா, மீதி இருக்குறதுல ஒன்றை நாம பிடிச்சே ஆகணும்! அப்படிங்கிறதுதான். இதற்காக சிபாரிசுக்காக தங்களின் பர்ஷனல் ஃபைலுடன் டெல்லிக்கு கில்லி கிளியாக பறந்து கொண்டிருக்கிறார்கள். ஹும் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்ச்சுட்டு உருண்டாலும்....