காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு நல்ல நடிகர் என பா.ஜ., எம்.எல்.ஏ சுரேந்திர சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திரசிங். இவரது பேச்சு எப்போதும் சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
 பல்லியா என்னும் இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்... அப்போது பேசியவர்.."காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு நல்ல நடிகர். அவர் அரசியலை விட்டு விலகி சினிமாவின் சொந்த ஊரான மும்பைக்கு செல்லவேண்டும். நாங்கள் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கொரோனா தொற்று காலத்தில் எப்படி சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதோ, அதுபோல காங்கிரஸ் தனது கொள்கைகளை தூர விலக்கி கொள்ள வேண்டும்." எனக் கூறினார்.