Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராகுல் காந்தி..!! கழுவி ஊற்றும் எதிர் கட்சிகள்..!!

பீகார் சட்டசபை தேர்தலுக்கான 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,  இந்த தேர்தலில் 114 பெண்கள் உட்பட 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 

Rahul Gandhi has blown up the rules of election conduct .. !! Opposition parties washing away .. !!
Author
Delhi, First Published Oct 28, 2020, 12:30 PM IST

நீதிக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும், விவசாயிகளுக்காகவுப் உங்கள் வாக்கு இருத்தல் வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து ராகுல்காந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அவர் மீது தேர்தல் ஆணையத்தின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கடுமையான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு பீகார் சட்டமன்ற  தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டு இன்று காலை  7 மணி முதல் சுமார் 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Rahul Gandhi has blown up the rules of election conduct .. !! Opposition parties washing away .. !!

காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று சமூக இடைவெளி விட்டி வாக்களித்த வண்ணம் உள்ளனர். அதே போல் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவு  செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பீகார் மக்கள் தங்கள் வாக்குரிமையை தவறாமல் நிறைவேற்றுமாறும், மக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இப்படி ஒவ்வொரு தலைவர்களும் வாக்காளர்கள் பாதுகாப்புடன் ஜனநாயக கடமையாற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

Rahul Gandhi has blown up the rules of election conduct .. !! Opposition parties washing away .. !!

ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ ஒரு படி மேலே போய் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போதும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இது எதிர்க் கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து விதிமுறைகளையும் மீறும் வகையில், " நீதி, வேலைவாய்ப்பு , விவசாயிகளுக்காக இந்த முறை உங்கள் வாக்கு பெருங்கூட்டணிக்கு மட்டும்''  என்றும்  அனைத்து பீகார் மக்களுக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான நல் வாழ்த்துக்கள் என்றுப் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு  தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது என  எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி மீது பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Rahul Gandhi has blown up the rules of election conduct .. !! Opposition parties washing away .. !! 

பீகார் சட்டசபை தேர்தலுக்கான 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த தேர்தலில் 114 பெண்கள் உட்பட 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக  தபால் ஓட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் சுமார் 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டத்தில் இரண்டு கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 787  வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர். மொத்தம் 31,380 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios